ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

படத்தின் காப்புரிமை Reuters

ஸ்பெயின் அரசால் டிசம்பர் மாதம் கேட்டலோனியாவில் நடத்தப்படவுள்ள தேர்தலில், கேட்டலன் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் பங்குகொண்டால் வரவேற்போம் என ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.

கேட்டலன் நாடாளுமன்றம் தனிநாடு பிரகடனம் செய்த பிறகு, அதை கட்டுப்பாட்டில் எடுத்தது ஸ்பெயின் அரசு.

ஸ்பெயினின் நேரடி அதிகாரத்தை எதிர்த்து, `ஜனநாயக எதிர்ப்பை` தெரிவித்து வருகிறார் பூஜ்டிமோன்.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு, இல்லினாய் மாகாணத்தின் நீதிபதி பணிக்கான அழைப்பு வந்துள்ளதாக, நீதிமன்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தெளிவான விளக்கங்கள் இன்னும் வராத நிலையில், அவர் சிவில் அல்லது குற்றவியல் வழக்குகளை விசாரிக்க அழைக்கப்படாலம் என தெரிகிறது.

ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பயின்ற ஒபாமா, செனட்டிற்கு வருவதற்கு முன்பு, 12 ஆண்டுகள் சிகாக்கோ பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியவர் ஆவார்.

இங்கிலாந்தை சேர்ந்த 21 வயதாகும் ஜாக் லெட்ஸ், ஐ. எஸ் அமைப்பில் உறுப்பினராக உள்ளார் என்ற குற்றச்சாட்டுடன், குர்திஷ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு, சிரியாவிற்கு பயணித்த இவர், ஐ.எஸ் எதிர்ப்பாளி என்றே முன்பு தன்னை கூறிவந்தார்.

கடந்த மே மாதம், ஜாக் கைது செய்யப்பட்டு, வடக்கு சிரியாவில் உள்ள சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை MOHAMED ABDIWAHAB/AFP/GETTY IMAGES

சோமாலிய தலைநகர் மொகதிஷுவில் நடைபெற்ற இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வெடிபொருட்கள் நிரப்பிய காரை விடுதியினுள் ஓட்டிச் சென்று முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள், விடுதியினுள் நுழைந்தனர். இரண்டாவது வெடிகுண்டு, முன்னாள் நாடாளுமன்ற கட்டடத்துக்கு அருகில் வெடித்தது. இதில் 14 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :