டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளர் மீது பணமோசடி, சதித்திட்ட குற்றச்சாட்டு

மான்ஃபோர்ட் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பால் மான்ஃபோர்ட்

உக்ரைன் உடனான தனது தொடர்பில் அமெரிக்காவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் பிரசார மேலாளராக இருந்த பால் மான்ஃபோர்ட் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பணமோசடி செய்யச் சதித்திட்டம் தீட்டியது உள்பட, பால் மான்ஃபோர்ட் மற்றும் அவரது வணிக கூட்டாளியான ரிக் கேட்ஸுக்கு எதிராக 12 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது.

மான்ஃபோர்ட்டும் அவரது வழக்கறிஞரும் வாஷிங்டனில் உள்ள எப்பிஐ அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் விசாரணையில் இருந்து, இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மான்ஃபோர்டும் அவரது வணிக கூட்டாளியான ரிக் கேட்ஸும், உக்ரேனில் பதிவு செய்யப்படாத முகவர்களாகச் செயல்பட்டு லட்சக்கணக்கான டாலர்களைச் சம்பாதித்ததை மறைத்ததாகக் குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

உக்ரைன் அரசியல்வாதி விக்டர் யானுகோவிச் மற்றும் அவரது கட்சிக்கும், மான்ஃபோர்டும், கேட்ஸும் பதிவு செய்யப்படாத முகவர்களாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரஷ்ய ஆதரவு கொள்கைகளால், 2014-ம் ஆண்டு விக்டர் உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து பதவியிறக்கப்பட்டார்.

வெளிநாட்டு வங்கிக்கணக்கு மூலம் மான்ஃபோர்ட் 18 மில்லியன் டாலர் பணமோசடி செய்து, அதன் மூலம் சொத்துக்களையும் பொருட்களையும் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் மில்லர் தலைமையிலான விசாரணை ஆணையம், ரஷ்யாவிற்கும் டிரம்ப் பிரசாரத்திற்கும் இடையேயான தொடர்பை ஆராய்கிறது. தங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை இரண்டு தரப்பும் மறுக்கிறது.

குற்றச்சாட்டுகள் குறித்த செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக ட்விட் செய்த டிரம்ப், தனது பிரச்சாரம் குறித்து அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்றும், தனது போட்டியாளர் ஹிலாரி கிளிண்டன் சம்மந்தப்பட்டதாகக் கூறப்படும் தவறுகள் குறித்து ஏன் `கவனம்` செலுத்தவில்லை என டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்

உக்ரைனில், ரஷ்ய ஆதரவு அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக மான்ஃபோர்ட் மீது குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, டிரம்பின் பிரசார மேலாளர் பதவியில் இருந்து 2016 ஆகஸ்ட் மாதம் அவர் விலகினார்.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்