பேஸ்புக்: 12.6 கோடி மக்களை ரஷிய பதிவுகள் சென்று சேர்ந்துள்ளது

பேஸ்புக் படத்தின் காப்புரிமை Sean Gallup/Getty Images

ரஷியாவை மையமாக கொண்டு இயங்கியவர்கள் பதிவிட்ட, பேஸ்புக் பதிவுகள் 126 மில்லியன் மக்களை சென்று சேர்ந்துள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்பும், பின்னரும் 80 ஆயிரம் பதிவுகள் போடப்பட்டதாக தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பதிவுகளின் நோக்கம், சமூக மற்றும் அரசியல் செய்திகளுக்கு இடையே பிரிவினையை கொண்டுவரும் வகையிலேயே இருந்துள்ளன.

செனட் விசாரணைக்கு முன்னதாக இந்த விளக்கங்களை பேஸ்புக் வெளியிட்டது. பிரபலமான தளங்களில் ரஷிய செயல்பாட்டின் தாக்கம் என்ன என்பது குறித்து, பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் ஆகியவை, விளக்கவுள்ளன.

ஹிலாரியை தோற்கடித்து, டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற அதிபர் தேர்தலில், ரஷியாவின் தலையீடு இருந்தது என்ற குற்றச்சாட்டை, தொடர்ந்து அந்நாடு மறுத்தது.

பேஸ்புக் அண்மையில் வெளியிட்டுள்ள இந்த விவரங்களை ராய்டர்ஸ் செய்தி நிறுவனமும், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையும் பார்த்துள்ளன.

ஜூன் 2015 முதல் ஆகஸ்ட் 2017 வரை, 80 ஆயிரம் பதிவுகள் போடப்பட்டுள்ளன.

ரஷிய அரசுடன் தொடர்புடைய, அந்நாட்டு நிறுவனம் இந்த பதிவுகளை போட்டதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கின் ஆலோசகரான காலின் ஸ்ரெட்ச், ` இந்த நடவடிக்கைகள், பேஸ்புக் எதற்காக உள்ளது என்பதற்கும், ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற பேஸ்புக்கின் எண்ணத்திற்கும்எதிராக உள்ளதாக கூறியுள்ளார் என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

`இந்த புதிய அச்சுறுத்தலை எவ்வாறு அணுகுவது என்பதில், எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய நாங்கள் முனைப்போடு உள்ளோம்`.

திங்கட்கிழமை, கூகுள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிண்டல் செய்யும் விதமாக, ரஷியா 1000 வீடியோக்களை, 18 விதமான யூடியூப் பக்கங்களில் பதிந்ததாக கூறியுள்ளது என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.

இதற்கிடையே, டுவிட்டர், ரஷிய இணையதள தேடல் நிறுவனத்திற்கு தொடர்புடைய 2,752 கணக்குகளை கண்டறிந்து, இடைநீக்கம் செய்துள்ளது என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :