எஃப்.பி.ஐயிடம் டிரம்பின் பிரசார ஆலோசகர் கூறியது பொய்யா?

ஜார்ஜ் பாப்பலோப்புலாஸ் படத்தின் காப்புரிமை TWITTER/@GEORGEPAPA19

ரஷியர்களுடனான சந்திப்பு எப்போது நடந்தது என்பது குறித்து, எஃப்.பி.ஐயிடம், அதிபர் டிரம்பின் பிரசார ஆலோசகர் பொய் கூறியது தெரியவந்துள்ளது.

டிரம்பின் தேர்தல் பிரசார ஆலோசகரான ஜார்ஜ் பாப்பலோப்புலாஸ், தான் டிரம்பிற்காக பணியாற்றிய போது தான், ரஷியர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும், அதற்கு முன்னதாக நடக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக, நீதிமன்ற கோப்புகள் தெரிவிக்கின்றன.

ஹிலாரி கிளிண்டனை கறைப்படுத்த வேண்டும் என்று ரஷியர்கள் எண்ணம் கொண்டிருந்ததாக தன்னிடம் கூறப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இதை தவிர, 2016 தேர்தலுக்கு தொடர்பில்லாத விவகாரத்தில், டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளரான பால் மனஃபோர்ட் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டது.

டிரம்பின் பிரசாரத்தில், ரஷியாவின் தொடர்பு குறித்து விசாரித்து வரும் சிறப்பு ஆலோசகரான ராபர்ட் மல்லர் முதலில் குற்றம் சாட்டியுள்ளது ஜார்ஜ் பாப்பலோப்புலாஸ் மீதுதான்.

அமெரிக்க தலைவரின் பிரசாரத்திற்கு நேரடி தொடர்பில் உள்ளதால், அவரை பாதிக்கும் அளவிற்கான சக்தி இந்த வழக்கிற்கு உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சிகாகோவை சேர்ந்த, சர்வதேச ஆற்றல் குறித்த வழக்கறிஞரான பாப்பலோப்புலாஸ், கடந்த ஏப்ரல் மாதம், டிரம்ப் வெளியிட்ட தனது தேசிய பாதுகாப்பு குழுவுடனான ஆலோசனை கூட்ட புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார்.

நீதிமன்ற கோப்புகளின்படி, டிரம்பின் வெளியுறவு கொள்கைகளுக்கான முன்னாள் அலோசகர், ரஷியாவின் உள்கூட்டுகள் குறித்த எஃப்.பி.ஐயின் விசாரணையில் இடையூறு செய்ததை ஒப்புகொண்டுள்ளார் என உள்ளது.

ஜனவரி மாதம், எஃப்.பி.ஐ அவரிடம் விசாரணை நடத்திய போது, டிரம்பின் பிரசாரத்தில் பங்கேற்பதற்கு முன்பு, ரஷியாவிற்கு தொடர்புடைய இருவரை சந்தித்தாக, பொய் கூறியுள்ளார். ஆனால், அவர், டிரம்பின் பிரசாரத்தில் இணைந்த பிறகே அவர்களை சந்தித்துள்ளார்.

அதில் ஒருவர், ரஷிய அரசு அதிகாரிகளுடன் தொடர்புடையவர் என்று ஜார்ஜால் நம்பப்படும், பெயர் குறிப்பிடப்படாத ரஷிய பெண்.

ரஷிய அரசு அதிகாரிகளுக்கு பிரசாரகர்களுக்கும் இடையிலான சந்திப்புகளை நடத்த அவரின் உதவியை நாடியதை ஜார்ஜ் ஒப்புக்கொண்டுள்ளார்.

மற்றொருவர், ரஷிய அரசு அதிகாரிகளுடன் கணிசமான நட்பு உள்ளதாக கூறப்படும் லண்டனை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத பேராசிரியர்.

டிரம்பின் பிரசாரத்தில், ஜார்ஜின் நிலையை பார்த்தே, அந்த பேராசிரியர் ஜார்ஜிடம் பேச ஆர்வம் காட்டியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஹிலாரி கிளிண்டன் மீது, ரஷியாவின், `கரையை` உருவாக்கும் செயல்பாடுகள், மின்னஞல்கள் மூலம் நடக்கும் என 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் நடந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்கோவில், ரஷிய அரசின் மூத்த அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பில், இந்த மின்னஞ்சல்கள் குறித்து பேசப்பட்டதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :