பிபிசி தமிழில் இன்று...

பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை iStock

பாலியல் வல்லுறவுக்கு ஆளானதால், சண்டிகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பெண் குழந்தை ஒன்றைப் பிரசவித்தது தொடர்பான வழக்கில், அவளது தாய்மாமன்கள் இருவர் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

செய்தியை வாசிக்க: 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவு: தாய்மாமன்கள் குற்றவாளி என தீர்ப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உணவின்றி பரிதவிக்கும் சிரியா குழந்தைகள்

டமாஸ்கஸின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சம் நான்கு லட்சம் பேரின் நிலையை மிகப்பெரிய அவலம் என ஐக்கிய நாடுகள் சபை விவரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை NAVEEN

வடகிழக்கு பருவமழை தொடங்கிய இரண்டு நாட்களில் பரவலாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியை வாசிக்க: வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

படத்தின் காப்புரிமை centre for innovation, IIT Madras

750 சதுர அடி பரப்பளவை 15 நிமிடங்களுக்கும் மேல் சுத்தம் செய்த 45 ரோபோக்களை உருவாக்கி 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்' சென்னை ஐஐடி மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

செய்தியை வாசிக்க:தூய்மை இந்தியா திட்டத்திற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய 'ரோபோ'

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
300 வருட ஆல மரத்திற்காக நிலத்தை விட்டுத்தரும் விவசாயிகள்

பஞ்சாபில் 300 வருடம் பழமையான ஆல மரத்தை பாதுகாப்பதற்காக, தங்களது சொந்த நிலங்களை விட்டுக்கொடுக்கும் விவசாயிகள் பற்றிய காணொளி.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கார்லஸ் பூஜ்டிமோன்

தனி நாடு பிரகடனம் செய்தபின், ஸ்பெயின் அரசால் கலைக்கப்பட்ட கேட்டலோனிய பிராந்திய நாடாளுமன்றத்திற்கு நடத்தப்படவுள்ள தேர்தலில் பிரிவினைவாத தலைவர்கள் போட்டியிடுவார்கள் என்று பதவிநீக்கம் செய்யப்பட்ட கேட்டலன் தலைவர் கூறியுள்ளார்.

செய்தியை வாசிக்க:ஸ்பெயின் அரசுக்கு கேட்டலன் தலைவர் சவால்

படத்தின் காப்புரிமை Getty Images

ஆஸ்திரேலியாவினால் பப்புவா நியூ கினியாவில் (PNG) நடத்தப்படும் அகதிகள் தடுப்பு முகாம் மூடப்படுவதையடுத்து அகதிகளை வெளியேற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை அங்கு தொடங்கியுள்ளது.

செய்தியை வாசிக்க: மானுஸ் தீவு: மூடப்படும் அகதிகள் தடுப்பு முகாம் - வெளியேற அகதிகள் மறுப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

ஐதராபாத்தில் விமானம் ஒன்றின் கதவு, அது வானில் பறந்துகொண்டிருந்தபோதே கழன்று ஒரு வீட்டின் மாடியில் விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை.

செய்தியை வாசிக்க: ஐதராபாத்: மொட்டை மாடி மீது கழன்று விழுந்த விமானத்தின் கதவு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஷேக்குகளுக்கு விடுமுறை மனைவிகளாக விற்கப்பட்ட இந்திய சிறுமிகள்

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கக்கூடிய வயதான அரபு ஷேக் ஆண்கள், ஹைதராபாத்தில் உள்ள ஏழை முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த சிறுமிகளை பணம் கொடுத்து திருமணம் செய்துகொண்டு, பிறகு அவர்களைக் கைவிட்டுவிடும் கொடூரம் நடந்து வருகிறது. ஷேக் ஒருவருக்கு 25,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுமியை பற்றிய காணொளி.

காணொளியை பார்க்க: ஷேக்குகளுக்கு 'விடுமுறை மனைவி'களாக விற்கப்பட்ட இந்திய சிறுமிகள்

பகுதியை பிரித்து புதிய உள்ளுராட்சி சபைகளை ஏற்படுத்துவது தொடர்பாக முஸ்லிம்களுக்கிடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.

செய்தியை வாசிக்க:இலங்கை: கல்முனை மாநகர சபையை பிரிப்பதில் முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடு

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

ரஷியாவை மையமாக கொண்டு இயங்கியவர்கள் பதிவிட்ட, பேஸ்புக் பதிவுகள் 126 மில்லியன் மக்களை சென்று சேர்ந்துள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

செய்தியை படிக்க:ரஷிய பதிவுகள் 126 மில்லியன் மக்களை சென்றடைந்தது: பேஸ்புக்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இரான்

இரானை சேர்ந்த 37 வயதான ஹோடா ஜர்ரா ஓர் உடல் கட்டமைப்பாளர்( பாடி பில்டர்). தனது கனவுகளுக்காக, இரானை விட்டுச் சென்ற அவர், 2015-ல் அமெரிக்காவில் குடியேறினார். அதே ஆண்டு, பிகினி போட்டியில் முதல் பரிசை வென்றார்.

படத்தின் காப்புரிமை TWITTER/@GEORGEPAPA19

ரஷியர்களுடனான சந்திப்பு எப்போது நடந்தது என்பது குறித்து, எஃப்.பி.ஐயிடம், அதிபர் டிரம்பின் பிரசார ஆலோசகர் பொய் கூறியது தெரியவந்துள்ளது.

செய்தியை படிக்க: எஃப்.பி.ஐயிடம் டிரம்பின் பிரசார ஆலோசகர் கூறியது பொய்யா?

உள்ளூர் தாதி ஹிமாஷிரிஷுக்கு சோலார் சூட்கேஸ் ஒரு உயிர் பாதுகாப்பு சாதனம்.தனது சுகாதார மையத்தின் மின்சார பிரச்சினைகளுக்கு சோலார் மூலம் தீர்வு கண்டிருக்கிறார்.

செய்தியை படிக்க:ஒரு சூட்கேஸில் உள்ள சூரிய சக்தி உயிர்களை காப்பாற்றுமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
விமானம்

ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் விமான நிலையத்தில் ஓர் விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, அங்கு பயங்கர காற்றடித்தது. இதனை உணர்ந்துக்கொண்ட விமானி, விமானத்தை மீண்டும் மேலேழுப்பியதை காட்டும் காணொளி.

படத்தின் காப்புரிமை Getty Images

தனது முகத்தை மறைப்பதற்காக இந்திரா வலது கையை தூக்கினார், அதற்குள் பியந்த் சிங், இந்திராவின் பக்கவாட்டு மற்றும் மார்பில் இரண்டு முறை சுட்டார். துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த தோட்டாக்கள் இந்திரா காந்தியின் மார்பு, பக்கவாட்டுப்பகுதி மற்றும் இடுப்புக்குள் ஊடுருவின.

செய்தியை படிக்க: சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற '80 பாட்டில் ரத்தம்': நடந்தது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நேபாளத்தில் தாய், சேயை காப்பாற்றும் சோலார் சூட்கேஸ்

நேபாளத்தில் அன்றாடம் மின்சார வெட்டு ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் நால்வரில் ஒருவருக்கு மின்சாரம் கிடைப்பதில்லை. இதனால், மின்சாரமோ நிலையான வெளிச்சமோ இல்லாதபோது நடந்த பிரசவங்களில் சிக்கல்கள் ஏற்பட்டதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதற்கான தீர்வாக சூரிய ஒளி சூட்கேஸை கண்டுபித்தார் மருத்துவர் லாரா ஸ்டாசெல்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :