மார்ட்டின் லூதரின் புரட்சி ஏற்படுத்திய வியப்பூட்டும் 5 “பக்க விளைவுகள்”

  • பெர்னான்டொ டுயர்டெ
  • டிஜிகப்
ரோமன் கத்தோலிக்க திருச்சபை பற்றிய விமர்சனங்களை 1571 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் வெளிப்படையாக வெளியிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ரோமன் கத்தோலிக்க திருச்சபை பற்றிய விமர்சனங்களை 1571 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் வெளிப்படையாக வெளியிட்டார்.

அக்டோபர் 31 செவ்வாய்கிழமை இன்னொரு ஹாலோவீனையும், அதனோடு தொடர்புடைய தந்திரம் மற்றும் உபசரிப்போடு தொடர்புடையதை அடையாளப்படுத்தும் நாளாகும்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மீதான மார்ட்டின் லூதரின் கடும் விமர்சனம் வெளியான 500வது ஆண்டு நாளும் அக்டோபர் 31 ஆம் தேதிதான்.

கிறிஸ்தவத்தை முழுமையாக மாற்றியமைத்த சீர்திருத்த சபை தோன்றிய நாளும் இதுதான்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபை மீது மார்ட்டின் லூதரின் விமர்சன தாக்குதல்கள், பல விளைவுகளை ஏற்படுத்தின. இந்த சீர்திருத்தத்தால் தூண்டப்பட்ட "மாபெரும் பிரிவினையோடு" தொடர்புடையோருக்கு கூட இந்த விளைவுகளில் சில வியப்பூட்டுபவையாகக அமைந்தன.

இங்கு அத்தகைய பக்கவிளைவுகளில் சிலவற்றைறை பட்டியலிடுகிறோம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இன்றைய 10 கிறிஸ்தவர்களில் சுமார் 4 பேர் சீர்திருத்த சபையை சேர்ந்தவராக உள்ளனர்.

பெண்களுக்கும், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் திறந்த கதவுகள்

குருக்கள் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது உலக கொள்கையாக இருப்பதை மார்ட்டின் லூதர் கண்டித்தார். 1525 ஆம் ஆண்டு முன்னாள் கன்னியாஸ்திரியாக இருந்த கேத்தரினா வான் போராவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் சீர்திருத்த சபைக்குள் ஒரு சீர்திருத்தம் ஏற்பட அடிப்படையாயிற்று. .

மெத்தோடிஸ்ட் போன்ற பிரிவுகள் 200 ஆண்டுகளுக்கு மேலாக பெண் ஊழியர்களை திருப்பொழிவு செய்துள்ளன. சமீபத்தில், பிற்போக்கு பிரிவுகளிடம் இருந்து பெரும் கண்டனங்களை சந்தித்தாலும், அமெரிக்க ஆயர்கள் அதிகார திருச்சபை ஓரினச்சேர்க்கையாளர்களை குருக்களாக திருப்பொழிவு செய்ய தொடங்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரே பெயருடைய மற்றொருவரால், தன்னுடைய தந்தையின் பாராட்டுதலின் அடையாளமாக லூதர் என்ற நடுப்பெயரை பெற்று, மார்ட்டின் கிங் என்பவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆனார்.

அமெரிக்க குடியுரிமை இயக்கத்திற்கு ஒரு சாத்தியமான உத்வேகம்

1934இல் அப்போதைய அமெரிக்க அமைச்சரான மார்ட்டின் கிங், பெர்லினில் நடந்த 5வது பாப்டிஸ்ட் வேர்ல்ட் அலையன்ஸ் காங்கிரசில் பங்கேற்பதற்காக ஜெர்மனிக்கு சென்றார். அவர் வீட்டிற்கு திரும்பி சென்றபோது, லூதர் என்ற பெயரை தன்னுடைய தனது மகனுடைய பெயருடன் சேர்த்து 16 ஆம் நூற்றாண்டு கிளர்ச்சி கிறிஸ்தவருக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தார்.

அந்த மகன்தான், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குமிக்க நபர்களில் ஒருவராக விளங்கிய அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றார்.

'நாசிகளுடனான தொடர்பு'

ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு முன்பே அங்கு எதிர்ப்புத் தன்மை இருந்ததாக செய்தி இல்லை என்றாலும், இன்று ஜெர்மனியாக நாம் அறிந்ததைப் பற்றி மார்ட்டின் லூதர் விதைகளை விதைத்தார் என்று சிலர் அறிந்திருக்கிறார்கள்.

1536 வரை, அவர் மாற்று அமைப்பின் ஒரு பகுதியாக உத்துவேகத்துடன் யூதர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் செயல்பட்டார்.

1543ல், "யூதர்கள், அவர்களது பொய்" என்ற ஒரு ஒப்பந்தத்தை பற்றி 65 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட ஆவணத்தில் எழுதி, யூதர்களை லூதர் கண்டித்தார். ஜெப ஆலயங்களை எரித்துவிடுதல், யூத மதக்குருக்களை கட்டாய உழைப்பாளராகப் பயன்படுத்துதல் உட்பட யூதர்கள் சித்ரவதை செய்யப்பட வேண்டுமென்று லூதர் வலியுறுத்தினார்.

படக்குறிப்பு,

ஒரு நூற்றாண்டு கால தாமதத்தோடு, இசை மற்றும் சமயங்கள் பற்றிய லூதரின் எண்ணங்களால் பாச் கவரப்பட்டார்.

நான் பாச்சாக இருப்பேன்

தனது சீர்திருத்த தொகுதிகளின் பகுதியாக, லூதர் வழிபாட்டு சேவைகளில் மாற்றங்களை கொண்டு வந்தார். அதில், ஆன்மீக அனுபவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக பாடல் குழுவை வரையறுத்து அதிகபட்சமான முக்கியத்துவத்தை தேவாலயங்களில் பாடுவதற்கு அளித்தார்.

இது ஜெர்மனியில் குழு இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதில் ஜொஹான் செபாஸ்டியன் பாச் (1685-1750), லூதரின் தத்துவத்திலிருந்து அவரது புகழ்பெற்ற இசைத்தொகுப்பை உருவாக்கினார்.

படக்குறிப்பு,

முப்பதாண்டு கால போரினால் அதிகளவிலான உயிர்களை இழக்க நேரிட்டது..

'இடைக்கால பிரெக்ஸிட்‘

மார்ட்டின் லூதர் விருப்பமில்லாமல்தான் ரோமுக்கு சென்றார் என்பது ஆச்சரியமல்ல. 1521ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், போப் பத்தாம் பத்திநாதர் கத்தோலிக்க திருச்சபையில் இருந்து ஜெர்மனியை சேர்ந்த குருக்களை நீக்கினார்.

இந்த முடிவு சமுதாயத்தில் மார்ட்டின் லூதரின் கருத்துக்கள் பரவுவதை தடுக்க தவறிவிட்டது.

இதனால், சக்தி வாய்ந்த ஜெர்மானிய இளவரசர்களிடம் குருக்கள் அனுபவித்த சலுகைகளை விவசாயிகள் பெற்றனர்.

அப்போது மத்திய ஐரோப்பாவில் அருந்த பல்முக இனக் கலப்புகள் நிறைந்த, புனித ரோம பேராரசுக்கு பேரரசராக இருந்த ஐந்தாம் சார்லஸ் மன்னரின் மேலாதிக்கத்திற்கு சாவால்விடுவதற்கு குருக்கள் தயாராக இருந்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :