சீர்திருத்தப் புரட்சி: “பிரிவினையை சமாளிக்கும் நம்பிக்கையின் அடையாளம்”

16 ஆம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இருந்து சீர்திருத்த சபையினர் (புரோடஸ்டான்டு சபையினர்) பிரிந்த புரட்சியின்போது, நிகழ்ந்த வன்முறைக்கு கத்தோலிக்க மற்றும் லூத்தரன் தலைவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Sean Gallup/Getty Images

'சீர்திருத்தம்' என்று அறியப்படும் இந்தப் பிரிவினையால், ஐரோப்பாவில் பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டு, போருக்கும், சித்ரவதைக்கும் இட்டுச்சென்றது.

இந்த சீர்திருத்த புரட்சி ஏற்பட்ட 500வது ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், கடந்த காலம் மாற்ற முடியாது என்றாலும், அதனுடைய பாதிப்பை, உலகம் பிரிவினையை சமாளிக்கின்ற நம்பிக்கையின் அடையாளமாக மாற்ற முடியும் என்று இந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Sean Gallup/Getty Images

500 ஆண்டுகளுக்கு முன்னர் சீர்திருத்தம் தொடங்கப்பட்ட ஜெர்மனியின் விட்டன்பர்க் நகரில் சிறப்பு வழிபாடு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

ஜெர்மனி இறையியலாளர் மார்ட்டின் லூதர் கத்தோலிக்க திருச்சபை மீது வைத்த மிக கடுமையான விமர்சனங்கள், கிறிஸ்தவத்தின் முழு தோற்றத்தையே படிப்படியாக மாற்றியமைத்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :