நியூ யார்க்கில் டிரக் மோதி குறைந்தது 8 பேர் பலி, 11 பேர் காயம்

காணொளிக் குறிப்பு,

துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக வந்த தகவல்களை அடுத்து, சம்பவ இடத்தில் அவசரகால சேவை

நியூயார்க்கில் கீழ் மன்ஹாட்டனில் டிரக் ஓட்டுநர் ஒருவர் நடைபாதை மற்றும் சைக்கிள் பாதையில் சென்ற மக்கள் மீது மோதியதால் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டு்ள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர்.

பட மூலாதாரம், CBS

வாகனத்தில் இருந்து வெளிவந்த 29 வயதான ஒருவரை போலீஸார் சுட்டு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட இந்த நபர் கடந்த 2010-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்த குடியேறி என்றும், அவரது பெயர் சய்ஃபுல்லோ சாய்போவ் என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவர் ஒட்டி வந்த டிரக்கில் இருந்த ஒரு குறிப்பு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு குறித்து குறிப்பிட்டுள்ளதாக சட்ட அமலாக்க பிரிவை சேர்ந்த ஒரு ஆதாரம் சிபிஎஸ் நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், CBS

படக்குறிப்பு,

கைது செய்யப்பட சந்தேக நபர்

ஃபுளோரிடாவில் குடியேறி அங்கு தங்கிவிட்ட இந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த நியூ யார்க் நகர மேயர் பில் ட பிளாசியோ கூறுகையில், ''அப்பாவி மக்களை குறிவைத்து நடந்த இந்த தாக்குதல் ஒரு கோழைத்தனமான செயல்'' என்று கூறியுள்ளார்.

கீழ் மன்ஹாட்டனில் மேற்கு பக்க நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கிடைத்த தகவலையடுத்து, இந்த கைது நடைபெற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அவசரகால சேவைகள் நடைபெறுவதால் அந்த பகுதியில் செல்வதை தவிர்க்குமாறு காவல்துறை மக்களை வலியுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னால், கார் ஓட்டி சென்ற ஒருவர், மிதிவண்டி பாதையில் மதிவண்டி ஓட்டி சென்றவர்கள் மீது காரை மோதியதாக உறுதிப்படுத்தப்படுத்தப்படாத சமூக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Reuters

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :