ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

படத்தின் காப்புரிமை RENA LAVERTY/AFP/Getty Images

ஜனவரி மாதம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து வாஷிங்டென்னிற்கு பயணித்த போது, தடை செய்யப்பட்ட பொருளை கொண்டுவந்ததாக, ஹாலிவுட் நடிகை ரோஸ் மகௌவனுக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமானநிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த தடைசெய்யப்பட்ட பொருள் அவருடையதுதான் என கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது முதன்முதலில் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு கூறியவர் இவர்தான்.

படத்தின் காப்புரிமை Reuters

நீக்கப்பட்ட, கேட்டலன் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் அவரின் நாடாளுமன்றத்தில் உள்ள 13 உறுப்பினர்களையும், இந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, ஸ்பெயின் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கார்லஸ் பூஜ்டிமோன் மீது, கிளர்ச்சிக்கான குற்றச்சாட்டு பதியப்படும் என ஏற்கனவே ஸ்பெயினின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார்.

கார்லஸ் உள்ளிட்ட பல அமைச்சர்கள் தற்போது, பெல்ஜியத்தில் உள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

2015ஆம் ஆண்டு, ஆம்ஸ்டர்டாமில் இருந்து பாரிஸிற்கு வந்து கொண்டு இருந்த டாலிஸ் ரயிலில் நடந்த தாக்குதல் குறித்த வழக்கில், இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகளில் பங்குகொண்டதாக அவர்களுக்கு பங்கு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும், துப்பாக்கிச்சூடு நடத்திய கசானிக்கு உதவி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை SEAN GALLUP/GETTY IMAGES

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், சமூக வலைதளங்களில் ரஷ்யாவின் இடையூறு உள்ளதா என்பது குறித்து நேற்று பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களிடம் விசாரணை நடைபெற்றது.

ரஷ்ய நிறுவனங்களால், தங்களின் இணையதளத்தில் விளம்பரங்கள் வாங்கப்பட்டதை எவ்வாறு கவனிக்க தவறினார்கள் என அந்த நிறுவனங்களிடம் நேற்று செனட் விசாரணையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையை தொடர்ந்து, சமூக வலைதள நிறுவனங்களுக்கான, புதிய வழிமுறைகள் குறித்து சட்டமியற்றுபவர்கள் கவனித்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

பாகிஸ்தானில், புதிதாக திருமணம் ஆன ஒரு பெண், தன் கணவரின் உறவினர்கள், குறைந்தது 14 பேருக்கு உணவில் விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சந்தேகத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அஷியா பிபி என்ற அந்த பெண், தன்னை கட்டாய திருமணம் செய்துகொண்டதால், தனது கணவருக்கு மட்டும் விஷத்தை கலந்ததாகவும், அதை பிறரும் குடிக்கும் நிலை ஏற்பட்டு விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :