பிபிசி தமிழில் இன்று...

பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தேர்வு எழுதும் மாணவன்.

தமிழகத்தில் பணிபுரிந்துவந்த பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், சென்னையில் குடிமைப் பணித் தேர்வு எழுதும்போது ப்ளூடூத் கருவியைப் பயன்படுத்தி விடைகளை எழுத உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவரது மனைவி கைதாகியுள்ளார்.

பட மூலாதாரம், ABID BHAT

கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மர்மமான முறையில் பெண்களின் கூந்தல் வெட்டப்படும் சம்பவங்கள் சுமார் 40 இடங்களில் நடந்துள்ளன. இதனால் அங்கு பெரும் கோபம் உண்டாகியுள்ளதுடன் போராட்டங்களும் நடக்கின்றன.

இலங்கையின் கிழக்கே கல்முனை மாநகர சபையின் அதிகாரத்திற்குரிய பகுதியின் எல்லையை பிரிப்பது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ள அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் சாய்ந்த மருது பிரதேச முஸ்லிம்களுக்குப் போட்டியாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பட மூலாதாரம், AFP

சௌதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹூதி கிளர்ச்சியாளர்களிள் வலுவிடமான ஏமனின் வட மாகாணமான சாதாவில், குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஏமனில் இருந்து வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

பிரஸ்ஸல்சில் பூஜ்டிமோன் செய்தியாளர்களை சந்தித்தபோது தனி நாடு ஆதரவாளர்கள், எதிர்பாளர்கள் என இரு தரப்பினரும் அங்கு கூடியிருந்தனர்.

கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் கலைக்கப்பட்ட அவரது அரசில் பணியாற்றிய 13 பேர் மீது கலகம் செய்தல், தேச துரோகம், பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவர்களை நேரில் ஆஜராக ஸ்பெயின் உயர் நீதிமன்றம் நீதிமன்றம் த்தரவிட்டுள்ளது.

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் விதித்த தடையால் கத்தாரில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. 27 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்த நாடு தன் உணவுத் தேவைகளுக்காக பிற நாடுகளின் உதவியை எதிர்நோக்கி இருக்க வேண்டும்.

பட மூலாதாரம், Reuters

நியூ யார்க் டிரக் தாக்குதலுக்கு பிறகு, உள்நாட்டு பாதுகாப்புத்துறையிடம் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையை அடுத்த கொடுங்கையூரில் தேங்கிக் கிடந்த மழை நீரில் அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததால், இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர்.

பட மூலாதாரம், AFP

கடந்த வியாழனன்று வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, அமெரிக்க உளவுத்துறை மற்றும் புளோரிடாவிலிருந்து வந்த கியூபா குடியேறிகள் சிலமுறை சந்தித்து பேசினார்கள். அதில் ஃபிடல் காஸ்ட்ரோவை கொலை செய்வது குறித்த திட்டங்கள் தீட்டப்பட்டன.

பட மூலாதாரம், AFP/Getty Images

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல சதித்திட்டம் திட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட செச்சேனைச் சேர்ந்த ஒருவரும் அவரது மனைவியும் சென்ற கார் உக்ரேன் தலைநகருக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளானதில் அந்நபர் காயமடைந்தார் மேலும் அவரது மனைவி கொல்லப்பட்டார்.

காணொளிக் குறிப்பு,

நியூ யார்க் டிரக் தாக்குதல்

நியூ யார்க் டிரக் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், பள்ளி பேருந்து மீது தனது டிரக்கை மோதிய பிறகு கையில் துப்பாக்கி ஏந்தியப்படி ஓடும் காணொளி.

பட மூலாதாரம், AFP/Getty Images

பாகிஸ்தானில், புதிதாக திருமணம் ஆன பெண் ஒருவர், தனது கணவருக்கும், அவரின் உறவினருக்கும் பாலில் விஷம் கலந்து கொல்ல முயன்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், FABRICE COFFRINI/AFP/GETTY IMAGES

1984 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வெடித்த கலவரத்தில் குறிவைத்து தாக்கப்பட்ட சீக்கிய சமுதாயம் பற்றிய விவாதங்களும், பேச்சுவார்த்தைகளும் ஒவ்வோர் ஆண்டும் உயிர்த்தெழுந்து வருகின்றன.

காணொளிக் குறிப்பு,

இந்தியாவின் முதலை பிரதேசம்: உயிர் அச்சத்தில் மக்கள்

ஒடிசாவில் உள்ள பிதர்கானிகா சரணாலயத்தில், மிகப்பெரிய முதலைப் பாதுகாப்பு திட்டம் அமைந்துள்ளது. இந்தச் சரணாலயத்தில் இத்திட்டம் தொடங்கப்படும் போது 74 முதலைகள் இருந்தன. தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இந்த முதலைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு உட்புகுந்து வருவதால், மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

காணொளிக் குறிப்பு,

மர பைக்

மோட்டார் சைக்கிள், டிரக்கு மற்றும் மரக் கட்டையின் மறுசுழற்சி பாகங்களில் இருந்து குறைந்த விலையில் தயாரிக்கப்படும் சூக்குடு எனும் மர பைக், காங்கோ ஜனநாயக குடியரசின் பெருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது எப்படி?

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :