அரபு நாடுகளுக்கு விற்கப்படும் ஐதராபாத் சிறுமிகள்: காரணம் யார்?
வயதான அரபு ஷேக்குகளுக்கு திருமணம் என்ற பெயரில் ஐதராபாத் சிறுமிகள் விற்கப்படக் காரணம் அவர்களின் ஏழ்மை மற்றும் விழிப்புணர்வின்மையா இல்லை, அதிகாரிகளின் அக்கறையற்ற செயல்பாடுகளா என்ற கேள்விக்கு பிபிசி சமூக வலைதள நேயர்கள் பதிவிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Znapshot.Photography
"முதல் காரணம் வறுமை. இரண்டாவது வறுமையை தீர்க்காத அறுபதாண்டு அரசுகள் ! மூன்றாம் காரணம் வறுமைக்காக எதையும் செய்யலாம் என நினைக்கும் கேவலமான மனிதர்கள்."
"நான்காவது காரணம் வறுமை வறுமை என்று சொல்லிக்கொண்டு எல்லாத்துக்கும் யாரவது கொடுத்து உதவனும்னு நெனைக்கிற மகா கேவல மனிதனின் சோம்பல் இவர்கள் மதம் மட்டும் மாறவில்லை மனசாட்சியையும் விற்று விட்டே மனிததன்மை மறந்து விட்ட மிருகங்கள் இறுதி காரணம்," ஈன்று பல காரணங்களையும் தர்க்க ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் பதிவிட்டுள்ளார் ஜீவன் எனும் நேயர்.
"காரணம் இந்திய அரசாங்கம்தான். இந்தியால இருந்து அதும் குறிபிட்ட பகுதிகளில் இருந்து பெண்கள் வெளிநாட்டுக்கு போகும்போது என்ன வேலைக்கு போகிறார்கள் என்று விசாரிக்க வேண்டும். அங்குள்ள இந்தியத் தூதரங்கங்கள் மூலமாகவும் விசாரித்து பாதிப்புக்கு ஆளாகும் முன்பே தடுக்க வேண்டும்," என்று அரசுக்கும் பொறுப்பு உள்ளதைக் கூறுகிறார் சரண் சரோ எனும் பிபிசி நேயர்.
"இதை அந்த மதத்தின் சீர்திருத்தவாதிகள் தான் சரி செய்ய முடியும் . பிற மதத்தை சேர்ந்தவர்கள் இதில் கருத்து தெரிவிக்க முடியாது . அந்த சிறுமி இப்படி பட்ட நிலைக்கு தள்ளபட காரணம் என்ன என்பதை அறிந்து அதை சரி செய்ய வேண்டும்." என்று கூறியுள்ளார் முத்துசெல்வம் பிரேம் எனும் ஃபேஸ்புக் பதிவாளர்.
'விவாதம் நடத்தி எதுவும் மாறாது' என்கிறார் ஒரு நேயர்.
"பெற்றோர்களின் அறியாமை மற்றும் வறுமை காரணமாகும்.பெண்களுக்கு கல்வி அளிப்பது அவசியம்.இது போன்ற சம்பவம் நடக்கவிடாமல் அரசாங்கம் தனி சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அரசு மற்றும் பெற்றோர் இரு தரப்பினர் குறித்தும் கூறுகிறார் மாணிக்கம் சூர்யா எனும் பதிவாளர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்