ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

கைது செய்யப்பட்ட சய்ஃபுல்லோ சாய்போவ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

கைது செய்யப்பட்ட சய்ஃபுல்லோ சாய்போவ்

நியூ யார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சய்ஃபுல்லோ சாய்போவ் என்ற 29 வயது நபர், சைக்கிள் ஓட்டுநர்கள் செல்லக்கூடிய பாதையில், டிரக்கை இயக்கி நடத்திய தாக்குதலில், எட்டு பேர் கொல்லப்பட்டதோடு, 11 பேர் காயமடைந்து

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைக்கு இவர் பொருட்கள் மற்றும் தகவல்களை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்கர் விருது பெற்ற இரண்டு நடிகர்கள், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் மற்றும் ஒரு மூத்த அமெரிக்க பத்திரிக்கையாளர் ஆகியோர் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கெவின் ஸ்பேசி மற்றும் டஸ்டின் ஹாஃப்மான் ஆகிய நடிகர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு அவர்கள் அதற்கு மன்னிப்பு வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த மாதத்தில் ஹார்வி வைன்ஸ்டீன் மீது தொடர்ந்து பல பாலியல் தாக்குதல் குற்றசாட்டுகள் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள்

பால்ஃபோர் பிரகடனத்தின் நூற்றாண்டு நினைவையொட்டி அதற்கு மன்னிப்பு கோரும் விதமாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரை பகுதியில் ஒரு வீதியோர விருந்து நிகழ்ச்சியொன்றை பிரிட்டன் கலைஞரான பாங்ஸி ஏற்பாடு செய்துள்ளார்.

பிரிட்டனின் தற்போதைய மகாராணியான இரண்டாம் எலிசபெத் போல உடையணிந்த ஒரு நடிகர் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளை உபசரித்து வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர்.

பட மூலாதாரம், Getty Images

மனையியின் அனுமதி இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்த பாகிஸ்தான் நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேலும், ஷாஷாட் சாஹிப் என்ற அந்த நபருக்கு 1900 அமெரிக்க டாலர்கள் பணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஷாஷாட் சாஹிப்பின் முதல் மனைவியான ஆயிஷா பாகிஸ்தான் குடும்ப சட்டத்தை மேற்கோள் காட்டி இந்த வழக்கில் வெற்றிகரகமாக வாதாடினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :