ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

பட மூலாதாரம், EPA
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்
ஸ்பெயினிலிருந்து பிரிந்து தனிநாடு அமைக்கும் முடிவை வெளியிட்டுள்ள கேட்டாலோனியாவின் எட்டு அமைச்சர்களை கைது செய்துள்ள ஸ்பெயின் அரசின் முடிவை எதிர்த்து ஆயிரக்கணக்கான காட்டலன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்பெயினின் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானவர்கள் கலகம், தேசதுரோகம் மற்றும் பொது நிதியை தவறாக பயன்படுத்தியாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இவ்வழக்கு குறித்த விசாரணையில் ஆஜராகாமல், தற்போது பெல்ஜியத்தில் உள்ள காட்டலன் தலைவர் சார்லஸ் பூஜ்டிமோனை கைது செய்ய ஐரோப்பிய கைது உத்தரவுக்காக வழக்கறிஞர்கள் முயன்று வருகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
ஒசாமா பின் லேடனின் சொந்த நாட்குறிப்பு, அவரது மகன் ஹம்சாவின் திருமணம் மற்றும் அவரை பற்றிய ஆவணப்படங்கள் ஆகியவை அல் கொய்தா தலைவரின் கணினியில் இருந்ததை கண்டறிந்துள்ளதாக சிஐஏ தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட அரை மில்லியன் கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது இந்த வகையில் நான்காவது முறையாகும்.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதலின்போது பின் லேடனின் கணினி எடுக்கப்பட்டது.
பட மூலாதாரம், AFP/Getty Images
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது எழுப்பப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான இரண்டு வழக்குகளின் விசாரணையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.
நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் லண்டனில் உள்ள சொத்துக்களின் உரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தாங்கள் எந்தவொரு தவறான செயல்களையும் செய்யவில்லை என்று மறுக்கிறது நவாஸ் தரப்பு. அதே நேரத்தில் அவர்களுடைய ஆதரவாளர்கள் இந்த வழக்குகள் அரசியல் சார்புடையது என்று கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
ஜனநாயகக் கட்சியின் முன்னாள் இடைக்கால தலைவர், ஹிலாரி கிளின்டன் 2016 தேர்தல் பிரசாரத்தின்போது தனது தரப்பு வழங்கிய நிதிக்கு ஈடாக கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
டோனா ப்ரசிலே தனது புதிய புத்தகத்தில் ஜனநாயகக் கட்சியின் தேசியக் கமிட்டி (DNC) கிளிண்டன் குழுவுடன் கட்சியின் நிதி ரீதியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த உடன்பாடு பெர்னீ சாண்டர்ஸை விட கிளின்டனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.
பட மூலாதாரம், EPA
இராக் நகரான மொசூலுக்காக நடந்த போரின்போது ஐஎஸ் தீவிரவாதிகளின் "மரணதண்டனை பாணியிலான கொலைகளில்" 741 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மேலும், பெரியளவிலான கடத்தல்களை மேற்கொண்டு, அவர்களை மனிதக் கேடயங்களைப் பயன்படுத்தியதாகவும், வேண்டுமென்றே வீடுகளை தாக்கியதாகவும், தப்பி ஓட முயன்றவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
"இதற்கு காரணமானவர்கள் தங்களது கொடூரமான குற்றங்களுக்கு பதில் கூற வேண்டும்" என்று ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் சையத் ராவுத் அல் ஹுசைன் தெரிவித்தார்.
பிற செய்திகள்
- கேட்டலோனியா: விசாரணையில் ஆஜராகவில்லை பூஜ்டிமோன்
- திரைப்பட நடிகரை எதிர்த்து நீதிமன்றம் சென்ற வங்கதேச ஆட்டோ ஓட்டுநர்
- கவுன்டரில் ஆளில்லை: டிக்கெட் இல்லாப் பயணிகளிடம் வழியில் கட்டணம் வசூலித்த ரயில்வே
- இந்தியாவுக்கு இந்திரா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
- 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்