நவாஸ் ஷெரிஃப் மீதான ஊழல் விசாரணை தள்ளிவைப்பு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 2 வழக்குகளின் விசாரணையை நவம்பர் 7 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒன்று ஒத்தி வைத்துள்ளது.

பட மூலாதாரம், AFP/Getty Images
நவாஸ் ஷெரிஃபும், அவருடைய குடும்ப உறுப்பினரில் சிலரும் லண்டனில் வைத்திருக்கும் உடைமைகளின் உரிமை தொடர்பாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியில் ரீதியாக புனையப்பட்டவை என்று கூறும் அவர்கள் தாங்கள் தவறு எதையும் செய்யவில்லை என்று கூறிவருகின்றனர்.
கணக்கில் காட்டப்படாத வருமானம் தொடர்பாக 67 வயதான நவாஸ் ஷெரிஃபை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கியதை தொடர்ந்து, ஜூலை மாதம் பிரதமர் பதவியில் இருந்து அவர் விலகினார்.
ஷெரிஃப் குடும்பத்தினரின் நிதி நிலைமைகள் பற்றி விரிவான புலனாய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்துவதற்கு தேசிய பொதுப் பொறுப்பு அமைப்புக்கு நீதிமன்றம் ஆணையிட்டது.
பல வாரங்கள் அனுமானங்களுக்கு பிறகு வியாழக்கிழமை ஷெரிஃப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்பி வந்துள்ளார்.
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்ற மனைவியோடு அவர் ஐக்கிய ராஜ்ஜிய தலைநகரில் தங்கியிருந்தார்.
முன்னாள் பிரதமரும், அவருடைய மகள் மரியம் மற்றும் மருமகன் இஸ்லாமாபாத் பொதுப் பொறுப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை காலை ஆஜரானார்கள்.
ஆனால், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தால் வியாழக்கிழமை வழங்கப்பட்ட ஆணை, பொதுப் பொறுப்பு நீதிமன்றத்துக்கு வந்து சேரவில்லை என்பதால், அந்த விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்