பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை

பிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

டிரம்பின் ட்விட்டர் கணக்கு

பட மூலாதாரம், Twitter

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கு வியாழனன்று சில நிமிடங்களுக்கு தற்காலிகமாக செயலிழந்தது. ஆனால், உடனடியாக கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாக சமூக வலைதளமான ட்விட்டர் கூறியுள்ளது.

படக்குறிப்பு,

வங்கதேசத்தின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நடிகர்களுள் ஒருவர் ஷகிப் கான்

தனது தொலைபேசி எண்ணை ஒரு படத்தில் பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஒரு வங்கதேச ஆட்டோ ஓட்டுநர் அந்நாட்டின் மிக பிரபலமான திரைப்பட நட்சத்திரம் ஒருவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

படக்குறிப்பு,

மழைநீரின் ஆக்கிரம்மிப்பில் இருக்கும் கொடுங்கையூர் வீதிகள்

"தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றவுத்தத் தாழ்வு பகுதி, அதே இடத்தில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் நிலவுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்."

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஐ.எஸ் பகுதியைக் கைப்பற்றியபின் வெற்றிக்குறி காட்டும் சிரிய ராணுவ வீரர்.

தனது கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை தொடர்ச்சியாக இழந்து வந்த ஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக இருந்த தெஹிர் அசோர் நகரை சிரியப் படைகள் கைப்பற்றியுள்ளன. தற்போது அதிக முக்கியத்துவம் இல்லாத மிகச் பகுதிகளே அந்த அமைப்பின் வசம் உள்ளன.

பட மூலாதாரம், EPA

இராக்கின் மொசூல் நகரில் நடைபெற்ற போரின்போது, இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடத்திய கொலைகளில் குறைந்தது 741 நபர்கள் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மாமன்றம் தெரிவித்திருக்கிறது.

எகிப்தின் கிஸாவிலுள்ள மாபெரும் பிரமிட்டுக்குள் இருக்கும் முன்னர் அறியப்படாத மிகப் பெரிய குழியை கண்டுபிடிக்க, பிரபஞ்ச கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காணொளிக் குறிப்பு,

அதிகரித்து வரும் யானை, மனித மோதல்கள்

சுரங்க அகழ்வு மற்றும் தொழில்மயமாதல் ஆகியவற்றால் காடுகள் சுருங்கி வருவதால், வயல்களுக்கும், வீடுகளுக்கும் உணவை தேடி யானைகள் அடிக்கடி வருகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். (காணொளி)

காணொளிக் குறிப்பு,

ஆறடி நிலமில்லா ஆந்திர கிராமம்; ஓடத்தில் போகும் இறுதிப்பயணம்

ஆந்திராவின் கோலமுடி கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய நிலம் இல்லை. பிணத்தை நதியைக் கடந்து எரிப்பதற்கு படகு பயன்படுத்தப்படுகிறது. (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :