பிபிசி தமிழில் இன்று...
பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், HRajaBJP
இந்து வலதுசாரியினர் கூட்டத்தில் தீவிரவாதம் பரவியிருக்கிறது என்று கடந்த சில தினங்களுக்குமுன் நடிகர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில் கமலை சீற்றத்துடன் விமர்சித்துள்ளார்.
செய்தியை படிக்க: தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு கமல் உயர்ந்துவிட்டார்: எச் ராஜா
பட மூலாதாரம், Getty Images
ஒசாமா பின் லேடன் அமெரிக்க சிறப்புப்படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார்
அல் காய்தா ஒசாமா பின் லேடனின் நாட்குறிப்பு, அவரது மகன் ஹம்சாவின் திருமணக் காட்சிகள் மற்றும் அவரைப் பற்றிய ஆவணப்படங்கள் ஆகியவை அல் கொய்தா தலைவரின் கணினியில் இருந்ததை கண்டறிந்துள்ளதாக சிஐஏ தெரிவித்துள்ளது.
சென்னை வெள்ளம் தொடர்கதையா?
"தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றவுத்தத் தாழ்வு பகுதி, அதே இடத்தில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் நிலவுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்."
செய்தியை படிக்க: தமிழகத்திலேயே அதிகமாக மயிலாப்பூரில் 30 செ.மீ. மழை
பட மூலாதாரம், Getty Images
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பதின்வயதுப் பெண்ணின் பெற்றோர், காவல் துறை வழக்கு பதிவு செய்ய மறுத்தத்தைத் தொடர்ந்து, தங்கள் மகளைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரை அவர்களாகவே பொது இடத்தில் வைத்துப் பிடித்துள்ளனர்.
செய்தியை படிக்க: மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை மடக்கிப் பிடித்த போலீஸ் பெற்றோர்
பட மூலாதாரம், Getty Images
ஐ.எஸ் பகுதியைக் கைப்பற்றியபின் வெற்றிக்குறி காட்டும் சிரிய ராணுவ வீரர்.
தனது கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை தொடர்ச்சியாக இழந்து வந்த ஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக இருந்த தெஹிர் அசோர் நகரை சிரியப் படைகள் கைப்பற்றியுள்ளன. தற்போது அதிக முக்கியத்துவம் இல்லாத மிகச் பகுதிகளே அந்த அமைப்பின் வசம் உள்ளன.
செய்தியை படிக்க: ஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையைக் கைப்பற்றியது சிரியா
பட மூலாதாரம், EPA
இராக்கின் மொசூல் நகரில் நடைபெற்ற போரின்போது, இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடத்திய கொலைகளில் குறைந்தது 741 நபர்கள் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மாமன்றம் தெரிவித்திருக்கிறது.
எகிப்தின் கிஸாவிலுள்ள மாபெரும் பிரமிட்டுக்குள் இருக்கும் முன்னர் அறியப்படாத மிகப் பெரிய குழியை கண்டுபிடிக்க, பிரபஞ்ச கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தியை படிக்க: பிரமிட்டுக்குள் என்ன உள்ளது? கண்டுபிடிக்க கதிர் தொழில்நுட்பம்
அதிகரித்து வரும் யானை, மனித மோதல்கள்
சுரங்க அகழ்வு மற்றும் தொழில்மயமாதல் ஆகியவற்றால் காடுகள் சுருங்கி வருவதால், வயல்களுக்கும், வீடுகளுக்கும் உணவை தேடி யானைகள் அடிக்கடி வருகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். (காணொளி)
ஆறடி நிலமில்லா ஆந்திர கிராமம்; ஓடத்தில் போகும் இறுதிப்பயணம்
ஆந்திராவின் கோலமுடி கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய நிலம் இல்லை. பிணத்தை நதியைக் கடந்து எரிப்பதற்கு படகு பயன்படுத்தப்படுகிறது. (காணொளி)
ஆணாதிக்க ஆடுகளத்தில் சாதிக்க முயலும் பெண்கள்!
இன்றும் கூட ஆடுகளத்தில் சிறுமிகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பிபிசியின் நூறு பெண்கள் தொடரின் ஒருபகுதியாக, கால்பந்தாட்டத்தை காதலிக்கும் இரு இளம் பெண்களிடம் பேசியது பிபிசி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்