ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

பூஜ்டிமோனுக்கு ஐரோப்பிய பிடிவாரண்ட்

பட மூலாதாரம், Reuters

ஸ்பெயின் நீதிபதி ஒருவர், பெல்ஜியத்தில் உள்ள கேட்டலோனியாவின் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் அவரின் நான்கு கூட்டாளிகளை கைது செய்வதற்காக ஐரோப்பிய பிடிவாரண்ட் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை, இந்த ஐந்து பேரும் மேட்ரிட் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மற்ற ஒன்பது பிராந்திய தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது புரட்சி, தேசத்துரோகம், பொதுமக்களின் பணத்தை கேட்டலன் சுதந்திரம் பெறுவதற்காக தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ராபர்ப் முகாபேவுக்கு எதிராக பதிவிட்ட அமெரிக்கர் கைது

பட மூலாதாரம், Reuters

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை அவமதிக்கும் வகையிலான டுவிட்டர் பதிவிட்டதற்காக, அமெரிக்க பெண் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

25 வயதாகும் மார்த்தா என்ற அந்த பெண்மணி, அதிபரை `சுயநலமான மனிதர் மற்றும் நோயாளி` என குறிப்பிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அக் குற்றச்சாட்டை அவர் மறுக்கிறார்.

அவர் மீது, அதிபரை அவமதித்தல் மற்றும் அரசை வீழ்த்த திட்டமிடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிரம்ப்: ஐ.எஸ் மீது 10மடங்கு அதிக தாக்குதல் நடக்கிறது

பட மூலாதாரம், Getty Images

நியூயார்க் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக, ஐ. எஸ் மீது பத்து மடங்கு அதிக சக்தி வாய்ந்த தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

`ஒவ்வொறு முறை அவர்கள் நம்மை தாக்கும்போது, அது ஐ.எஸ் தான் என நமக்கு தெரியும். நீங்கள் நம்பமுடியாத வகையில் நாங்கள் அவர்களை தாக்குகிறோம்` என்றார் அவர்.

ஆனால், ஐ.எஸ் பகுதிகளில், அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலில் எந்த பெரிய மாற்றத்தையும் அதன் ராணுவத்தின் எண்ணிக்கை காண்பிக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் போர்: போர் குற்றங்கள் குறித்த விசாரணை

பட மூலாதாரம், AFP

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர், ஆப்கானிஸ்தான் போரின் போது, நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர்குற்றங்கள் குறித்த விசாரணை தேவை என தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `அங்கு போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்திருக்கலாம் என்பதை நம்புவதற்கான வலுவான நிலை உள்ளது` என்று கூறிள்ளார்.

2003ஆம் ஆண்டு, போரின் போது, தாலிபனின் செயல்பாடு, ஆஃப்கன் அரசின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க படைகளின் நடவடிக்கைகள் உள்ளிட்டவை இதில் விசாரிக்கப்படும்.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :