பிபிசி தமிழில் மாலை 6 மணி வரை இன்று
பிபிசி தமிழில் மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Reuters
முறையான விசாரணை நடக்கும் என்று உறுதி கிடைக்கும் வரை நான் ஸ்பெயின் திரும்பமாட்டேன் என்றும் கேட்டலோனிய குடியரசின் தலைவராக தான் தொடர்ந்து நீடிப்பதாகவும் பூஜ்டிமோன் கூறுகிறார்.
செய்தியை படிக்க: தனி நாடு அறிவித்த கேட்டலன் தலைவரை கைது செய்ய ஸ்பெயின் ஆணை
பட மூலாதாரம், AFP
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 11 நாட்கள் பயணமாக ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கிறார். இந்த பயணத்தில் அவர், ஜப்பான் தென் கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.
செய்தியை படிக்க: டிரம்பின் நீண்ட ஆசிய பயணம்: வட கொரியா பிரச்சனையை தீர்ப்பாரா?
கிச்சடி
இந்திய மத்திய அரசு நடத்தும் சர்வதேச இந்திய உணவுத் திருவிழாவில் 800 கிலோ கிச்சடி சமைக்கப்படும் என்ற தகவல், சமூக வலைத்தளங்களில் சூடான விவாதத்தை கிளம்பியது. சர்ச்சையை கிளப்பிய கிச்சடியில் அப்படி என்னதான் உள்ளது என்பதை விளக்கும் காணொளி.
பட மூலாதாரம், AFP
(கோப்புப் படம்)
நீரில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேரும் நீர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
செய்தியை படிக்க: இலங்கை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர் மாயம்
பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசு டெல்லியில் நடத்தும், சர்வதேச இந்திய உணவுத் திருவிழா 2017-இல் 800 கிலோ கிச்சடி சமைக்கப்படும் என்ற தகவல் வெளியானதும், கிச்சடி இந்தியாவின் தேசிய உணவாக அறிவிக்கப்படும் என்று செய்தி வெளியானது.
செய்தியை படிக்க: கிச்சடி சர்ச்சை: நேயர்களின் 'சூடான' விவாதம்
பட மூலாதாரம், AFP
மக்கள் நெரிசல் மிகுந்த இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள பெட்டி போன்ற அடுக்குமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விமானம் ஒன்றை தயாரிக்க போவதாக 7 ஆண்டுகளுக்கு முன்னரே அமோல் யாதவ் தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்தார்.
செய்தியை படிக்க: வீட்டின் மொட்டை மாடியில் தயாரிக்கப்பட்ட இந்தியா ‘மேக்‘ விமானம்
பட மூலாதாரம், Reuters
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை அவமதிக்கும் வகையிலான ட்விட்டர் பதிவிட்ட அமெரிக்க பெண் மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக அப்பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
செய்தியை படிக்க: ஜிம்பாப்வே அதிபருக்கு எதிராக ட்வீட்: அமெரிக்க பெண் கைது
பட மூலாதாரம், Getty Images
2014-இல் பதுளையில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் பொருள் மற்றும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது
பதுளை மாவட்டத்தில் 29,000 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பகுதிகளில் அமைந்துள்ளன. அவற்றுள் 28,040 வீடுகள் 160 அரச நிறுவனங்கள், 98 பள்ளிக்கூடங்கள் அடக்கம்.
செய்தியை படிக்க: இலங்கை: பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்தில் 29,000 கட்டடங்கள்
சில மாதங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் ஒரு பேய்ப் படம். தமிழில் வழக்கமாக வெளிவரும் பேய்ப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் என்பது இன்னும் இந்தப் படத்தைக் கவனிக்க வைக்கிறது.
செய்தியை படிக்க: சினிமா விமர்சனம்: அவள்
பட மூலாதாரம், MIHAELA NOROC
''இப்போது கூகிள் படங்கள் தேடலுக்கு உடனடியாக செல்லுங்கள். அதில் அழகான பெண் என தேடுங்கள்'' என்றார் புகைப்படவியலாளர் மைஹேலா நொரொக்.
செய்தியை படிக்க: உண்மையான அழகுப் பெண்கள் இப்படித்தான் இருப்பார்களா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்