ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

சௌதி இளவரசர்கள் கைது

படத்தின் காப்புரிமை AFP

ஊழலுக்கு எதிரான புதிய அமைப்பு, 11 இளவரசர்கள், பதவியில் உள்ள நான்கு அமைச்சர்கள் மற்றும் டஜனுக்கும் அதிகமான முன்னாள் அமைச்சர்களை கைது செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அரசாணை மூலமாக உருவாக்கப்பட்டு, முடி இளவரசர் முகமது பின் சல்மானால் முன்னெடுக்கப்படும் இந்த குழு, உருவாக்கப்பட்ட சில மணி நேரங்களில் இந்த கைது நடந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் யார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஹிலாரிக்கு வாக்களித்த புஷ்

படத்தின் காப்புரிமை Getty Images

குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ் சீனியர், 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், தான் ஹிலாரிக்கு வாக்களித்தேன் என்று உறுதி செய்துள்ளதோடு, டிரம்ப்பை, `வெற்றுத்தனமானவர்` என குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் குடியரசு கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், நானே குடியரசு கட்சியின் கடைசி அதிபரான இருப்பேன் என்று, கவலைகொள்வதாக, அவரின் மகனான ஜார்ஜ் டபிள்யூ புஷ் தெரிவித்துள்ளார்.

`அதிபராக இருப்பதென்றால் அவருக்கு என்னவென்றே தெரியவில்லை` என்றார் அவர்.

`தி லாஸ்ட் ரிப்ப்ளிகன்ஸ்` என்ற புத்தகத்தில் அவர்கள் இதை தெரிவித்துள்ளனர்.

சௌதியில் மர்ம ஏவுகணை

படத்தின் காப்புரிமை AFP

ஏமன் நாட்டில் இருந்து ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தடுத்து ழித்துள்ளதாக, சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.

ரியாத் நகரில், இதனால் வெடிசத்தம் கேட்டது என்றும் தெரிவித்துள்ளது.

ஏவுகணை வானிலேயே அழிக்கப்பட்டு, அதன் சிதைவுகள்

ரியாத் விமான நிலையத்தில் விழுந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர் என்று, சௌதி ஊடக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹௌதி கிளர்ச்சியாளர்களுடன் தொடர்புடைய ஏமன் நாட்டு தொலைக்காட்சி ஒன்று, இந்த ஏவுகணை கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஏவப்பட்டது என தெரிவித்துள்ளது.

முன்னாள் உளவாளி கைது

படத்தின் காப்புரிமை Reuters

தெற்கு சிலி காவல்துறை, ஜெனரல் அகஸ்டோ பினஷேவின் ராணுவ ஆட்சி காலத்தில் ரகசிய உவாளியாக இருந்த ஒருவரை, கைது செய்து, மனித உரிமைகள் மீறல் காரணங்களுக்காக சிறையில் அடைத்துள்ளது.

ரெய்மர் கொலிட்ஸ் என்ற அந்த நபர். அர்ஜெண்டீனாவின் எல்லைப்பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு சோதனையின் போது கைதுசெய்யப்பட்டார்.

1984ஆம் ஆண்டு, இரண்டு இடதுசாரி செயல்பாட்டாளர்களை கொன்ற குற்றத்திற்காக, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது முதல் அவர் தலைமறைவாக இருந்தார்.

1970கள் மற்றும் 1980களில், ஜெனரல் அகஸ்டோ பினஷேவின் ஆட்சியை ஏற்காத, கிட்டத்தட்ட மூன்று ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

சிலியின் ரகசிய காவல்துறையால், பல பேர் சித்ரவதையும் செய்யப்படனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :