பிபிசி தமிழில் 1 மணி வரை இன்று

பிபிசி தமிழில் மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

ஜின்னா

பட மூலாதாரம், AFP

முகமது அலி ஜின்னா மற்றும் ருட்டி பெடிட்டின் ஒரே மகள் தீனா வாடியா. பார்சி குடும்பத்தை சேர்ந்தவர் ருட்டி, ஜின்னா இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். தீனா பிறந்தபோது, ஜின்னா தம்பதிகளின் மணவாழ்க்கை சுமூகமாக இல்லை.

பட மூலாதாரம், Getty Images

குடியரசு கட்சியை சேர்ந்த, அமெரிக்காவில் முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ் சீனியர், அதிபர் டிரம்ப்பை, `வெற்றுத்தனமானவர்` என்று பொருள்படும், `பிளோஹார்ட்` என்று குறிப்பிட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தான் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்ததையும் உறுதி செய்துள்ளார்.

பட மூலாதாரம், AFP

ஊழலுக்கு எதிரான புதிய குழுவின், களையெடுப்பில், சௌதியின் 11 இளவரசர்கள், ஆட்சியில் உள்ள நான்கு அமைச்சர்கள் மற்றும் டஜன்களுக்கு அதிகமான முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காணொளிக் குறிப்பு,

ஆபாசப்படம் பார்ப்பவர்களுக்கு, `அதிர்ச்சி வைத்தியம்`

தென்கொரியாவில், ரகசிய கேமராக்கள் மூலமாக, ஆபாசப்படம் எடுப்பது, அதிகமாக நடக்கக்கூடிய குற்றமாக உள்ளது. இதை சரிசெய்யவும், ஆபாசப்படம் பார்ப்பவர்களை தடுக்கவும் புதிய யுக்தியை கையாண்டுள்ளது தென்கொரிய காவல்துறை. அது குறித்த காணொளி.

பட மூலாதாரம், PEDRO UGARTE

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் உட்பட பல்வேறு சம்பவங்களின் போது காணாமல் போனவர்களின் இறப்புகளை பதிவு செய்து மரண சான்றிதழை பெறுவதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் மேலும் இரு ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

சாதாரண பிரச்சனை கூட மதரீதியான சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுவது அரசியல் ஆதாயத்திற்கா, ஆரோக்கியமான விவாதமா என்று பிபிசி தமிழின் சமூக வலைதள நேயர்களிடம் வாதம்-விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துக்களில் தேர்நடுத்தவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Thinkstock

ராக்கெட் தொழில்நுட்பத்தில் திப்பு சுல்தான் மேற்கொண்ட முயற்சிகளின் ஆதாரங்கள் மற்றும் ராக்கெட் அபிவிருத்தி தொடர்பான வரலாற்று சான்றுகள் இப்போது வெளியாகவில்லை. அது 32 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிடப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :