`அமெரிக்காவின் தீர்க்கத்தை எந்த நாடும் குறைத்து மதிப்பிட முடியாது` -டிரம்ப் சீற்றம்

பட மூலாதாரம், AFP
தனது ஆசிய பயணத்தின் துவக்கமாக, ஜப்பான் வந்தடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், எந்த நாடும், அமெரிக்காவின் தீர்க்கத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று பேசியுள்ளார்.
டோக்கியோவிற்கு அருகில் உள்ள அமெரிக்காவின் யோகோட்டா ராணுவ தளத்தில் பேசிய அவர், அமைதியை காக்கவும், சுதந்திரத்தை பாதுகாக்கவும், ராணுவத்தினருக்கு தேவையான வளங்கள் தொடர்ந்து கிடைக்கும் என உறுதியளித்தார்.
வடகொரியாவின் அணுஆயுத திட்டம் மற்றும் ஏவுகணைகளின் சோதனை குறித்து, அந்நாட்டிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே சொற்போர் வலிமையாக நடப்பதற்கு மத்தியில் இந்த பயணம் நிகழ்கிறது.
25 ஆண்டுகளில் நீண்ட ஆசிய பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபராக டிரம்ப் இருப்பார்.
`எந்த தனிநபரோ, நாடு அல்லது சர்வாதிகாரியோ அமெரிக்காவின் தீர்க்கத்தை குறைத்து மதிப்பிட கூடாது` என்று அவர் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசினார்.
பட மூலாதாரம், Reuters
அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சூ அபேவை சந்தித்த பிறகு, இருவரும் கோல்ஃப் விளையாடினர்.
வரும் வாரத்தில், தென் கொரியா, வியட்நாம், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுக்கு டிரம்ப் பயணம் மேற்கொள்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்