வியாட்நாம் சூறாவளி : 27 பேர் பலி, 40,000 வீடுகள் சேதம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வியாட்நாம் சூறாவளி : 40,000 வீடுகள் சேதம், 27 பேர் பலி

வியாட்நாமில் டாம்ரே சூறாவளியில் சிக்கி 27 பேர் இறந்துள்ளனர், 20 பேர் காணாமல் போய் உள்ளனர்.

சனிக்கிழமை, மணிக்கு 90 கி.மீ வேகத்தில் வீசிய இந்த சூறாவளி மோசமான மண்சரிவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூறாவளி தெற்கு மற்றும் மத்திய வியாட்நாமை முழுவதுமாக சிதைத்துள்ளது. 40,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த சூறாவளியினால் சேதமடைந்துள்ளன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சென்னை வெள்ளம் தொடர்கதையா?

இந்த சூறாவளியினால் மோசமாக பாதிக்கப்பட்டது நா ட்ராங்க் நகரம் தான். இந்த நகரமானது, டா நாங் என்னும் கடலோர நகரத்திலிருந்து 500 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்த டா நாங் நகரத்தில்தான் உலக நாட்டின் தலைவர்கள் பங்கேற்கும் அபேக் (APEC) மாநாடு நடக்க உள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்த சூறாவளி சாலைகளை அபாயகரமானதாக மாற்றி உள்ளது.
படத்தின் காப்புரிமை AFP
Image caption சுற்றுலா நகரமான ஹோய் என்-இல் வசிக்கும் மக்கள் இந்த சூறாவளியால் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்
படத்தின் காப்புரிமை Reuters
Image caption சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களில் நா ட்ராங் நகரமும் ஒன்று
படத்தின் காப்புரிமை AFP
Image caption நா ட்ராங் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணி
படத்தின் காப்புரிமை EPA
Image caption கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டதிலேயே இதுதான் மோசமான சூறாவளி என்று வானிலை ஆய்வாளர்கள் விவரித்து இருக்கிறார்கள்.

தென் கிழக்கு ஆசிய நாடுகள் வருடந்தோறும் இதுபோன்ற சூறாவளியை சந்திக்கின்றன. சூறாவளியால் ஏற்படும் வெள்ளத்தினால் ஏராளமானோர் ஆண்டுதோறும் இறக்கிறார்கள்.

வெளிநாட்டு பயணிகள் உட்பட 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த சூறாவளியின் காரணமாக வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டதிலேயே இதுதான் மோசமான சூறாவளி என்று வானிலை ஆய்வாளர்கள் விவரித்து இருக்கிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்