ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

டெக்சஸ் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு

படத்தின் காப்புரிமை KSAT 12 / REUTERS

டெக்சஸில், வில்சன் கவுண்டியில் உள்ள தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை, தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்துகொண்டு இருந்த போது, உள்ளூர் நேரப்படி 11.30மணிக்கு, உள்ளே நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர், சரமாரியாக சுட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரியவர் அதன்பிறகு இறந்துவிட்டார்.

`வடகொரியா மீது படையெடுக்க வேண்டும்`

படத்தின் காப்புரிமை Getty Images

வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை முழுமையாக அழிப்பதற்கு, அந்நாட்டின் மீது படையெடுப்பது மட்டுமே ஒரே வழி என பெண்டகனில் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

`அந்நாட்டின் அணு ஆயுத திட்டங்களை கண்டறிந்து முழுமையாக அழிக்க, தரைவழி படையெடுப்பே ஒரே வழி` என்று, ரியர் அட்மிரல் மைக்கில் டியூமோண்ட், நாடாளுமன்ற உறுப்பினர் டெட் லியூவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்து; சௌதி இளவரசர் பலி

படத்தின் காப்புரிமை Getty Images

அசிர் பிராந்தியத்தின் இணை ஆளுநரான இளவரசர் மன்சூர் பின் மிக்ரின், பிற அதிகாரிகளுடன் பயணிக்கும் போது, ஏமன் நாட்டு எல்லை அருகே அவரின் ஹெலிகாப்டர் விழுந்து உடைந்ததாக அல்-இக்பாரியா என்ற தொலைக்காட்சி தெரிவிக்கிறது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

பாரடைஸ் பேப்பர் விவகாரம்

படத்தின் காப்புரிமை EPA

வெளிநாடுகளில் உள்ள வரிச்சலுகையை பயன்படுத்தி, எவ்வாறு மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பெரும் செல்வந்தர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்த புதிய நிதி ஆவணங்கள் கசிந்துள்ளன.

இதில், பிரிட்டன் அரசியின் தனியார் எஸ்டேட் குறித்த விவரங்களும் அடங்கியுள்ளது. மேலும், டிரம்பின் வர்த்தக செயலாளருக்கு, அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட ஒரு ரஷ்ய நிறுவனத்தில் பங்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்