பிபிசி தமிழில் 1 மணி வரை இன்று

பிபிசி தமிழில் மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Reuters

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ள 11 செளதி இளவரசர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர், உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான இளவரசர் அல்வலித் பின் தாலால்.

செய்தியை படிக்க: கைது செய்யப்பட்ட கோடீஸ்வர செளதி இளவரசர் பற்றி தெரியுமா?

படத்தின் காப்புரிமை KSAT 12 / REUTERS

டெக்சஸ் மாகாணத்தின், வில்சன் கவுண்டியில் உள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை படிக்க: டெக்சஸ் துப்பாக்கிச்சூடு: 26 பேர் பலி

மாட் லீரி சொல்கிறார் என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கண்டறிந்தபின் எனக்கு போதுமான உதவிகள் கிடைக்கவில்லை. இதுதான் என்னுடைய நீண்டகால உறவு முறிய காரணமாக அமைந்தது.

செய்தியை படிக்க: உறவு முறிய காரணமான ஆண் மலட்டுத்தன்மை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தனி நபராக ஏரியை காப்பாற்றும் காஷ்மீர் சிறுவன்

ஜம்மு கஷ்மீரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளின் ஒன்றான வூலர் ஏரியை தனி ஒருவனாக சுத்தம் செய்யும் 17 வயதான பிலால் அகமது தார் பற்றிய காணொளி.

படத்தின் காப்புரிமை Getty Images

2016 நவம்பர் 8ல் பிரதமர் மோதி ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார். பொருளாதாரக் கோட்பாடுகளின்படி பணம், பரிவர்த்தனை, முன்னெச்சரிக்கை, யூக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

செய்தியை படிக்க: `முழு தோல்வியடைந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை!'

படத்தின் காப்புரிமை AFP

"இந்தியாவில் ஊழல் தடுப்பு சட்டம் மட்டுமல்ல எந்த சட்டமாயினும் பாரபட்சம் பார்க்கபடுகிறது." என்கிறார் சாகர் வின்சென்ட்.

செய்தியை படிக்க: "இங்கே ஏழைக்கு ஒரு சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம்"

படத்தின் காப்புரிமை LIONEL BONAVENTURE/AFP/Getty Images

ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கும் ஆன்லைன் விளம்பரங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், இவ்வாறு நடப்பது முற்றிலும் தற்செயலானது என்பது ஒரு வலுவான வாதமாக உள்ளது. இதற்கு முன்னரே இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றாலும் தற்போதுதான் அதைப் பற்றி பேசத் தொடங்கியிருப்பதால் அவ்வாறு நினைக்க தோன்றலாம் என்றும் கூறப்படுகிறது.

செய்தியை படிக்க: உங்களுக்கு தெரியாமலேயே உரையாடல்களை ஒட்டுக் கேட்கிறதா ஸ்மார்ட்போன்கள்?

படத்தின் காப்புரிமை EPA

கேட்டலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் நான்கு முன்னாள் அமைச்சர்களை நிபந்தனையுடன் விடுவித்தார், பெல்ஜியம் நீதிபதி.

செய்தியை படிக்க:நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட கேட்டலோனிய முன்னாள் தலைவர்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :