வடகொரிய அணு ஆயுதங்களை ஒழிக்க தரைவழித் தாக்குதலே சரியான வழி: பென்டகன் ஆய்வு முடிவு

ஆணு ஆயுத திட்டங்களை அழிக்க வட கொரியா மீது தரைவழி படையெடுப்பே தீர்வு: பென்டகன்

பட மூலாதாரம், Getty Images

ஒரு தரைவழி படையெடுப்பின் மூலம் வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தின் அனைத்து கட்டமைப்புக்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க முடியும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் ஆய்வு ஒன்று அறிவித்துள்ளது.

ரியர் அட்மிரல் மைக்கேல் டுமாண்ட் தனது கருத்தை படைகளின் கூட்டுத் தளபதியின் சார்பில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரான டெட் லியுவிடம் கடிதம் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

சாத்தியமான பாதிப்பு புள்ளி விவரங்களை தோராயமாக கணக்கீடு செய்வதென்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று டுமாண்ட் கூறியுள்ளார்.

போர் தொடங்கினால், முதல் சில மணி நேரங்களில் என்னென்ன நடைபெறும் என்பது குறித்தும் சில தகவல்களை டுமாண்ட் தெரிவித்துள்ளார்.

'' முழுமையான உறுதியுடன் வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களின் அனைத்து கூறுகள் அமைந்திருக்கும் இடங்களை கண்டுபிடித்து பின்பு அதனை அழிக்க தரைவழி படையெடுப்பே சாத்தியம்,'' என்று லியுவின் கேள்வி ஒன்றுக்கு டுமாண்ட் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேலும், வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் மிக ஆழத்தில் புதைந்திருக்கும் நிலத்தடி நிலையங்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கை அமெரிக்க படைகள் ஈடுபட்டிருக்கும்போது, அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் ஒன்றை வட கொரியா நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்பட பல ஆபத்துகள் அமெரிக்காவின் படையெடுப்பால் ஏற்படலாம் என்று டுமாண்ட் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :