வட கொரிய ஏவுகணைகளை ஜப்பானால் வீழ்த்த முடியும் என்கிறார் டிரம்ப்

'வட கொரிய ஏவுகணைகளை ஜப்பானால் வீழ்த்த முடியும்''

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ராணுவ ஆயுதங்களால், வட கொரியாவின் ஏவுகணைகளை வானத்தில் இருந்து வீழ்த்த ஜப்பானால் முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

தேவைப்பட்டால், ஏவுகணைகளை ஜப்பான் இடைமறிக்கும் என அந்நாட்டு ஷின்சோ அபே கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் முதல் ஜப்பான் பயணத்தின் இறுதியில் இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினார்கள்.

அமெரிக்காவிடம் இருந்து பெரிய அளவிலான ராணுவ தளவாடங்களை அபே வாங்கப்போகிறார் என செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறினார்.

வட கொரியாவின் ஏவுகணைகள் குறிப்பிடும் விதமாக, அமெரிக்காவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்கிய பிறகு ஜப்பானால் ஏவுகணைகளை வானில் இருந்து வீழ்த்த முடியும் என டிரம்ப் கூறினார். மேலும், இதனால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பும், ஜப்பானுக்குப் பாதுகாப்பும் கிடைக்கும் என்றார் டிரம்ப்.

பட மூலாதாரம், Getty Images

ஜப்பான் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக, ராணுவத்தின் தரத்தையும், அளவையும் அதிகரிக்க வேண்டும் என அபே கூறினார்.

ஏவுகணை தடுப்பு, ஜப்பான் அமெரிக்கா இடையே 'சட்ட ஒத்துழைப்பை' அடிப்படையாகக் கொண்டது என்று அபே வலியுறுத்தினார். தேவைப்பட்டால் ஏவுகணைகளை வீழ்த்தவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

டிரம்பின் பயணத்தின்போது ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், இரு நாடுகளும் ராணுவ ரீதியான நெருங்கிய நட்பு நாடுகள் என்பதும் ஜப்பானில் உள்ள பல ராணுவத் தளங்களை அமெரிக்கா பராமரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :