வெளிநாடுகளில் உங்கள் பணத்தை மறைத்து வைப்பது எப்படி?
வெளிநாடுகளில் உள்ள வரிச்சலுகையை பயன்படுத்தி மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பெரும் செல்வந்தர்கள் வெளிநாடுகளில் எவ்வாறு முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற பெயரில் ஆவணங்கள் கசிந்துள்ள நிலையில், வரியில்லாத நாடுகளில் பணத்தை மறைத்து வைப்பது எப்படி என்பது குறித்த ஐந்து எளிய வழிகளில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

பட மூலாதாரம், Getty Images
ஐந்து எளிய வழிகளில் எப்படி மறைப்பது?
- பெயரில் மட்டுமே நிறுவனம் ஒன்றை உருவாக்க வேண்டும் அல்லது 'ஷெல்' நிறுவனத்தை உருவாக்க வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
- அந்நிறுவனத்தை வேறு எங்காவது எல்லை தாண்டி குறைந்த வரி அல்லது வரியில்லாத மிகுந்த ரகசியம் காக்கப்படும் நாடுகளிலும் அமைக்கவும். அதாவது, பெர்முடா, தி கேமன் தீவுகள், தி பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் அல்லது தி ஐல் ஆஃப் மேன் ஆகிய இடங்களில் நிறுவனத்தை அமைக்கவும்.
பட மூலாதாரம், Getty Images
- தொடர்ந்து, ஆவணங்களில் உங்கள் இடம்பெறுவதை தவிர்க்க, தொழிலை நடத்த பினாமிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழின் பிற செய்திகள்:
- அடுத்தப்படியாக, கூடுதலாக ரகசியத்தைப் பேணுவதற்கு வங்கிக் கணக்கை இன்னொரு நாட்டில் துவக்குங்கள். இப்போது ஷெல் நிறுவனம் இந்த வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தும்.
பட மூலாதாரம், Getty Images
- இப்போது பணத்தை நிறுவனத்தின் சொத்துக்கள் மீது முதலீடு செய்யவேண்டும். அல்லது திரும்ப செலுத்த தேவையில்லாத கடனாக பெற வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
பணத்தை மறைத்து வைக்கும் வழிகளில் இது ஒருவழி.
கடல் கடந்து வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட தொகை 10 டிரில்லியன் டாலர்கள் என ஒரு மதிப்பீடு கூறுகிறது.
இந்தத் தொகை ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸின் கூட்டு பொருளாதார உற்பத்திக்கு ஈடாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :