சௌதி அரேபியா: ஊழலுக்கு எதிராக கைதுகள் 'ஒரு தொடக்கமே'

சௌதி அரேபியா

பட மூலாதாரம், EPA

டஜன் கணக்கான இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களின் கைது என்பது, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடக்கமே என்று, அந்நாட்டின் தலைமை அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

எங்கு ஊழல் இருந்தாலும், அதை வேரோடு எடுக்கும் பணிகளின் தொடக்க நிலையே இந்த கைதுகள்` என்று, ஷேக் சௌத் அல் மொஜேப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சௌதி அரேபியாவின் அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் கைதான தகவல் ஞாயிற்றுக்கிழமை வெளிவந்தது.

இது முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானின் சக்திக்கு துணைநிற்பதைப் போல இருந்தது.

32 வயதாகும், முடிக்குரிய இளவரசரின் தலைமையில் செயல்படுகின்ற ஊழக்கு எதிரான அமைப்பு, 11 இளவரசர்கள், நான்கு அமைச்சர்கள் மற்றும் டஜன் கணக்கான முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய உத்தரவிட்டது. செல்வந்தரும், சர்வதேச தொழிலதிபருமான, அல்-வலீத் பின் தலாலும் இதில் அடங்குவார்.

சௌதி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரித்துள்ளார்.

"அரசர் சல்மான் மற்றும் சௌதியின் இளவரசர் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துதான் செய்கிறார்கள்" என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இளவரசர் மன்சூர் பின் மிக்ரின்

பட மூலாதாரம், TWITTER/@ASIRMUNICIPAL

"இன்று அவர்களால் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுபவர்கள் எல்லாம் பல காலமாக நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து வந்தவர்கள்" என்று குறிப்பிட்டார்.

விசாரணையில் உள்ள முன்னேற்றம் குறித்த மொஜிப்பின் அறிக்கையில், `முதல் பகுதி` முடிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"அதிக சாட்சியங்கள் ஒன்றுதிரட்டப்பட்டு, மிகவும் விளக்கமான கேள்விகள் கேட்கும் பணிகள் நடந்தன" என்று குறிப்பிட்டுள்ளது.

"இன்றைய தேதி வரை, சந்தேகத்திற்கு உரியவர்கள் அனைவருக்கும், சட்டரீதியான உதவிகளை பெறுவதற்கான முழு அணுகுமுறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, விசாரணை சரியான நேரத்திலும், வெளிப்படைத்தன்மையுடனும் நடக்கும்" என்றார்.

காணொளிக் குறிப்பு,

செல்வந்தர்கள் வெளிநாடுகளில் எவ்வாறு பணத்தை மறைத்து வைக்கிறார்கள்?

ஊழல் குறித்த நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக, அதிகாரிகள், சௌதி அரேபியாவின் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை, அசிர் பிராந்தியத்தின் இணை ஆளுநரான இளவரசர் மன்சூர் பின் மிக்ரின், ஆய்வுப்பயணத்தை முடித்து திரும்பும் போது, அப்ஹா அருகில் அவரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

விபத்திற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :