பிபிசி தமிழில் 1 மணி வரை இன்று

பிபிசி தமிழில் மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

டொனால்ட் டிரம்பின் வாகன தொடரணி

பட மூலாதாரம், AFP

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வாகன தொடரணி சென்றுகொண்டிருந்த போது, அதனை நோக்கி ஆபாச சைகை காட்டிய பெண் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை நினைவு கூர்வதென்பது சடங்கல்ல; மாறாக சரித்திரத்தின் போக்கைப் புரிந்துகொள்ளவும் நாளை புதிய சரித்திரம் படைக்கவுமான நிகழ்வின் தொடக்கமாகவே பார்க்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

வெளிநாடுகளில் உள்ள வரிச்சலுகையை பயன்படுத்தி மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பெரும் செல்வந்தர்கள் வெளிநாடுகளில் எவ்வாறு முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற பெயரில்ஆவணங்கள் கசிந்துள்ள நிலையில், வரியில்லாத நாடுகளில் பணத்தை மறைத்து வைப்பது எப்படி என்பது குறித்த ஐந்து எளிய வழிகளில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

பட மூலாதாரம், Getty Images

`பாரடைஸ் பேப்பர்ஸ்` - இது அண்மையில் கசிந்த ரகசிக கோப்புகளின் மற்றொரு தொகுப்பு. இந்த தொகுப்பில் முக்கியமான கோப்புகள் அனைத்தும் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒற்றை சட்ட நிறுவனத்துக்கு உரியவை. இந்த கோப்புகள் அனைத்தும் பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்கள் செலுத்திய வரி குறித்தவை. இது போன்ற ரகசிய கோப்பு கசிவுகளில் இதுதான் சமீபத்தியது.

காணொளிக் குறிப்பு,

உங்கள் பணத்தை மறைத்து வைப்பது எப்படி?

வரிச்சலுகையை பயன்படுத்தி மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பெரும் செல்வந்தர்கள் எவ்வாறு வெளிநாடுகளில் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்த விபரங்கள் அடங்கிய காணொளி.

" நிராகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு பதிலாக மாற்று எரிபொருள் கப்பலை அனுப்பி வைப்பதாக உறுதியளித்திருந்த இந்திய நிறுவனம் இறுதி நேரத்தில் மறுத்து விட்டது " என்றும் கொழும்பில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், RAVI PRAKASH

கடந்த இரண்டு மாதங்களாக குறைந்தது ஐந்து முறை ரேஷன் வாங்கச் சென்றேன். ஆனால், என்னுடைய பெயர் இயந்திரத்தில் வரவில்லை என்பதால் ரேஷன் பொருட்களை கொடுக்கமுடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். இந்த ஆதார் இல்லாவிட்டால்தான் என்ன? குடியா முழுகிவிடும்? ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் பசியால் உயிர்தான் போகிறது" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், CHANDAN KHANNA

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்குகளின் தீர்ப்பு தேதி இன்று (செவ்வாய்கிழமை) அறிவிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன்னர் தெரிவித்திருந்தநிலையில், தற்போது மீண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர் ஒருவர் உள்ளிட்டோர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிலர் காவல்துறையால் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கைது மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காணொளிக் குறிப்பு,

இன்று சர் சி.வி ராமன் பிறந்த தினம்: ஒளி அறிவியல் ஆசானை நினைவு கூறுவோம்

ஓளியியல் துறையில் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய சர் சந்திரசேகர வெங்கட ராமன் 1888-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டில் பிறந்தார். ஒளியின் பண்புகள் குறித்து விரிவான ஆராய்ச்சியை செய்து முக்கிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்த இவர், 1930 இல் நோபல் பரிசை வென்றார். சர் சி.வி ராமனின் பிறந்தநாளான இன்று அவரின் கண்டுபிடிப்பை பற்றிய காணொளி.

பட மூலாதாரம், Getty Images

தொடக்கத்தில் இது கருப்பு பணத்திற்கு எதிரான ஒரு "துல்லியமான தாக்குதல்" (Surgical Strike) என்று வர்ணிக்கப்பட்டாலும் இது ஏற்படுத்தியுள்ள மிகக் கடுமையான விளைவுகளை நோக்குகையில் இது அனைத்துத்தரப்பு மக்களையும் துறைகளையும் தாக்கியுள்ள, மேலும் தாக்கிவிருக்கின்ற ஒரு "தரைவிரிப்பு குண்டு வீச்சு" (Carpet Bombing) என்றுதான் வர்ணிக்கவேண்டியுள்ளது.

இந்திய எம்.பிக்கள், பிரபலங்கள் உள்பட 714 பேர் வெளிநாடுகளில் ரகசிய வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்திருப்பதாக பேரடைஸ் ஆவண கசிவு மூலம் தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :