பிபிசி தமிழில் இன்று.. மாலை 6 மணி வரை..

பிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

டிரம்ப் அதிபராகி ஓராண்டாகிறது

படத்தின் காப்புரிமை Tom Pennington/Getty Images

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று நவம்பர் 8-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவர் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் முடிவு வெளியான இந்தப் 12 மாதங்களை 'சுமூகமான' எனும் சொல்லைத் தவிர வேறு எந்த சொல்லைக் கொண்டு வேண்டுமானாலும் விவரிக்கலாம்.

செய்தியைப் படிக்க: இப்போது தேர்தல் வைத்தால் வெற்றி பெறுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்?

இதுவரை இல்லாத அளவுக்கு ஏமனில் பஞ்சம்

படத்தின் காப்புரிமை Getty Images

ஏமனில் உதவி நடவடிக்கைகளை தொடங்காவிட்டால் உலகில் கடந்த சில தசாப்தங்கள் காணாத மிகப்பெரிய பஞ்சத்தை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநாவின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியைப் படிக்க: 'ஏமனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பஞ்சம் ஏற்படலாம்'

'மாபெரும் பொருளாதார கொள்கைப் பேரழிவு'

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய அரசு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, நவம்பர் 8-ம் தேதியுடன் ஓராண்டாகிறது. அந்த நடவடிக்கை எற்படுத்திய தாக்கம் குறித்து, பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை இந்த வாரம் வெளியிடுகிறோம். அதன் நான்காம் பகுதி இது.

செய்தியைப் படிக்க: பணமதிப்பிழப்பு: 'மாபெரும் பொருளாதார கொள்கைப் பேரழிவு'

ஜின்பிங்கை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தாராளமாக புகழ்ந்து பேசியுள்ளார். இது வட கொரியாவின் சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் மற்றும் வர்த்தகம் மீதான சீனா குறித்த முந்தைய விமர்சனங்களுக்கு முரண்பட்டதாக உள்ளது.

செய்தியைப் படிக்க: பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை புகழ்ந்து தள்ளிய அதிபர் டிரம்ப்

செம்மறி ஆடுகளின் திறமை

படத்தின் காப்புரிமை SPL
Image caption மனித முகங்களை அடையாளம் கண்டுக் கொள்ளும் செம்மறி ஆடுகள்

பிரபலமான மனித முகங்களைக் அடையாளம் கண்டுகொள்ளும் திறனை செம்மறி ஆடு வெளிப்படுத்தியது என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

செய்தியைப் படிக்க: மனித முகங்களை அடையாளம் கண்டுகொள்ளும் செம்மறி ஆடுகள்

வருமான வரி சோதனை

படத்தின் காப்புரிமை Getty Images

ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

செய்தியைப் படிக்க: சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 184 இடங்களில் வருமான வரி சோதனை

சுத்தியல், கதிர் அரிவாள் எதை குறிக்கிறது?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கம்யூனிஸ்ட் கொடியில் உள்ள சுத்தி அரிவாள் எதை குறிக்கிறது?

வரலாற்றில் மிகவும் அறியப்பட்ட சின்னங்களின் ஒன்றாக சுத்தியல், கதிர் அரிவாள்உள்ளது. ரஷ்ய புரட்சியின் போது தோன்றிய இச்சின்னம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை அலங்கரிக்கிறது. இச்சின்னம் எதை குறிக்கிறது?

கடலுக்குள் ஒரு கல்லறை!

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கடலுக்குள் ஒரு கல்லறை! (காணொளி)

ஆச்சர்யமளிக்கும் புதிய விடயங்களை அளிக்கும் பிபிசியின் இயற்கை சார்ந்த ஆவணப் பட தொடரான "ப்ளூ பிளானட் II" குழுவினர், ஆழ்க்கடலில் இருக்கும் ஒரு நச்சு ஏரியில் நடக்கும் நிகழ்வுகளை விளக்கும் காணொளி.

சிலந்திகளால் நீந்த முடியுமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிலந்திகளால் நீந்த முடியுமா? (காணொளி)

இந்த சிலந்தி வெறும் தண்ணீர் மீது மட்டும் நடக்காது. அதனால் அதிவேகத்தில் நீந்தவும் முடியும். தற்போது, மருத்துவர் சாரா கூடேக்கர் சிலந்தியின் ஒரு குறிப்பிடத்தக்க திறனை கண்டறிந்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :