பிபிசி தமிழில் இன்று...

பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

அமெரிக்கா - சீனா இடையே முரண்பாடு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் டிரம்ப்

வியாழக்கிழமை தனது சீனப் பயணத்தின்போது ஷி ஜின்பிங்கை டிரம்ப் புகழ்ந்துள்ள நிலையில், .'அபெக்' நாடுகளின் உச்சி மாநாட்டில் இன்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் எதிர்எதிர் நிலைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

செய்தியை வாசிக்க: 'நியாயமற்ற வர்த்தகத்தை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது': டிரம்ப்

சௌதிக்கு பிரான்ஸ் அதிபர் திடீர் பயணம்

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption சௌதி இளவரசர் சல்மானுடன் பிரான்ஸ் அதிபர் மக்ரோங்

லெபனானின் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக சௌதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துப் பேசுவதற்காக இரண்டு மணி நேரம் மட்டும் சௌதி தலைநகர் ரியாத் செல்லவுள்ளதாக வியாழன்று அபுதாபியில் அறிவித்தார் எம்மானுவேல் மக்ரோங்.

செய்தியை வாசிக்க: சௌதிக்கு பிரான்ஸ் அதிபர் திடீர் பயணம்: காரணம் என்ன?

'பட்டினியும் வேலையின்மையும்தான் மோதி அரசின் சாதனை'

படத்தின் காப்புரிமை Getty Images

பண மதிப்பிழப்பு ஏற்படுத்திய தாக்கம் குறித்து, பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை இந்த வாரம் வெளியிடுகிறோம். அதன் ஐந்தாம் பகுதி இது.

செய்தியை வாசிக்க: பண மதிப்பிழப்பு: 'பட்டினியும் வேலையின்மையும்தான் மோதி அரசின் சாதனை'

ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை Getty Images

பிரபல ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஸ்டீவன் சீகல் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை போர்ஷியா டி ரோஸ்ஸி குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியை வாசிக்க: "அவர் காற்சட்டையை கழற்றியவுடன் அங்கிருந்து வெளியேறினேன்"

பெண்களின் உயிரைக் காக்கும் மருத்துவ 'செல்ஃபி'

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பெண்களின் உயிரைக் காக்கும் மருத்துவ 'செல்ஃபி'

தங்கள் கருப்பையின் வாயை செல்பேசியுடன் பொருந்தக்கூடிய ஒரு சிறிய மருத்துவ உபகாரணத்தைக் கொண்டு 'செல்ஃபி' படம் எடுப்பதன் மூலம் பல ஆஃப்ரிக்க நாடுகளில் பெண்கள் இறக்க பிரதானக் காரணமாக உள்ள கருப்பை வாய்ப் புற்றுநோயைக் கட்டுப்படுத்த முடிகிறது.

கடைசி முகலாய பேரரசர்

படத்தின் காப்புரிமை Picture Courtesy - The British Library
Image caption பகதூர் ஷா ஜாஃபர் II

கடைசி முகலாய பேரரசர் குறித்த நினைவுகள், கால ஓட்டத்தில் அனைவரது மனங்களிலிருந்தும் மறைந்துவிட்டது. அனைவரும் அவரை மறந்து போய் இருந்தனர். ஆனால், இப்போது மீண்டும் அவரது நினைவுகள் உயிர்த்தெழுந்து இருக்கிறது.

செய்தியை வாசிக்க: கடைசி முகலாய பேரரசர் என்ன ஆனார்...?

உலகின் முதல் நிலத்தடி விவசாயப் பண்ணை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
லண்டனில் செயல்படும் உலகின் முதல் நிலத்தடி விவசாயப் பண்ணை

லண்டனின் நிலத்துக்கடியில் நடக்கும் ஒரு வித்தியாசமான நுண்ணிய-புரட்சியை விளக்கும் காணொளி.

பொதுக்கழிவறை தட்டுப்பாடு : வழிகாட்டும் ஜெர்மன்!

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பொதுக்கழிவறை தட்டுப்பாடு : வழிகாட்டும் ஜெர்மன்

உலகின் சில நகர்ப்புறங்களில் ஒரு பொதுக்கழிவறையைக் கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால், ஜெர்மனியில் அப்படியல்ல. அங்குள்ள கார்டூம் நகரில், பொதுக் கழிவறை தேவையை 'தி நைஸ் டாய்லெட்' வசதி தீர்த்து வைக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :