பிபிசி தமிழில் 1 மணி வரை இன்று

பிபிசி தமிழில் மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

கேட்டலோனியாவில் டிசம்பர் மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தனது பாப்புலர் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேட்டலோனியா செல்ல உள்ளார்.

செய்தியை படிக்க: கேட்டலோனியா தேர்தல்: களம் இறங்கும் ஸ்பெயின் பிரதமர்; தொடரும் மக்கள் போராட்டம்

படத்தின் காப்புரிமை Getty Images

வட கொரியா உடனான அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் வார்த்தை போர் தொடர்கிறது. தன்னை முதியவர் எனக் கூறி வட கொரிய தலைவர் ஏன் அவமதிக்கிறார் என டிரம்ப் டிவிட்டரில் வியப்பாகக் கேட்டுள்ளார்.

செய்தியை படிக்க: கிம் ஜாங் உன்னை 'குள்ளமான, குண்டு' நபர் என்று அழைத்த டிரம்ப்

படத்தின் காப்புரிமை EPA

செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து பதவி விலகலை அறிவித்த தங்கள் நாட்டுப் பிரதமர் சாத் ஹரிரியின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்துமாறு செளதியிடம் லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் கேட்டுள்ளார்.

செய்தியை படிக்க:''செளதியில் உள்ள லெபனான் பிரதமரின் நிலை என்ன ஆனது?''

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜெட் எந்திர விசை அங்கியோடு பறந்து சாதனை படைத்த சாகச மனிதர்

ஜெட் எந்திர விசை அங்கியோடு பறந்து சாதனை படைத்த சாகச மனிதர் பற்றிய காணொளி.

தன்னுடைய மனைவியையும், மகனையும் கட்டாயப்படுத்த நாடு கடத்த வேண்டாம் என்று வட கொரியர் ஒருவர் சீன அதிபர் ஷி ஜிங்பிங்கிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தியை படிக்க: மனைவியையும், மகனையும் நாடு கடத்தாமல் இருக்க சீனாவிடம் மன்றாடும் வட கொரியர்

படத்தின் காப்புரிமை MANJUNATH KIRAN/AFP/GETTY IMAGES

கட்சியின் பல மாவட்ட மற்றும் தாலுக்கா தலைவர்களும், இந்த தேர்தலில், ஊருக்குள் இறங்கி, சக கட்சி பணியாளர்களை ஊக்குவித்து பணியாற்ற வேண்டும் என்ற தெளிவான செய்தியோடு திரும்பிச் சென்றனர்.

செய்தியை படிக்க: குஜராத் தேர்தல்: பாஜகவின் முன் உள்ள சவால்கள் என்ன ?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
81 வயதில் பட்டாம்பூச்சி பிடிக்கும் முதியவர் (காணொளி)

குழந்தை பருவத்தில் காப்பகத்தில் இழந்த வாழ்க்கையை அடையும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ள 81 வயது முதியவரை பற்றிய காணொளி.

படத்தின் காப்புரிமை Getty Images

வரும் நவம்பர் 15 முதல் 200க்கும் அதிகமான பொருட்களின் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்படும் என்று வெள்ளியன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் 23-வது கூட்டத்திற்கு பிறகு அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. அவற்றில் 178 பொருட்கள் ஜி.எஸ்.டியின் அதிகபட்ச வரி விகிதமான 28%த்தில் இருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

செய்தியை படிக்க:ஜி.எஸ்.டி வரி குறைப்பு: மத்திய அரசு பின் வாங்குகிறதா? தவறைத் திருத்திக் கொள்கிறதா?

படத்தின் காப்புரிமை BROCK ELBANK

சூரிய ஒளியின் யூ-வீ கதிர்களால், முகத்தில் உருவாகும் கரும்புள்ளிகளின் குவியல்களான 'ஃபிரிக்கல்கள்' எனக்கு உள்ளது குறித்து நான் எப்போதுமே கூடுதல் கவனமாக இருப்பேன்.

செய்தியை படிக்க:முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளின் அழகைக் கொண்டாடும் மனிதர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :