பிபிசி தமிழில் இரவு 10 மணி வரை

பிபிசி தமிழில் இரவு 10 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

இரான்-இராக் நிலநடுக்கம்

படத்தின் காப்புரிமை EPA

இரான்-இராக் எல்லையின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளார்கள்.

அளவுகோலில் 7.3-ஆக பதிவாகி உள்ளது.

செய்தியை படிக்க:இரான்-இராக் நிலநடுக்கம்: 400-க்கும் மேற்பட்டோர் பலி

அகதிகளின் உயிரைக் காப்பாற்றிய ஒலிம்பிக் வீராங்கனை!

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அகதிகளின் உயிரைக் காப்பாற்றிய ஒலிம்பிக் வீராங்கனை

சிரியாவில் இருந்து அபாயகர பயணம் மேற்கொண்டு புதிய வாழ்வைத் தேடி வந்து ஒரு வருடம் கூட முடியாத நிலையில், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் அகதிகள் அணியில் யூஸ்ரா மார்டினி இடம்பிடித்தார். சிரியாவில் இருந்து தப்பி வந்த அகதிகள் அடங்கிய படகை கடலில் நீந்தியவாறு தாங்கி்ப் பிடித்து க்ரீஸில் உள்ள கரைக்கு செலுத்திட உதவினார் யூஸ்ரா.

சாலையை கடக்கும்போது நூலிழையில் தப்பிய குழந்தை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
Dashcam footage captured a truck's near miss with a child in Norway

நார்வேயில் குழந்தை ஒன்று திடீரென சாலையை கடக்க முற்பட்டபோது பதிவு செய்யப்பட்ட காணொளி இது.

டிரக் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் விபத்து தடுக்கப்பட்டது.

இரான் - இராக் நிலநடுக்கம்: புகைப்படத்தொகுப்பு

படத்தின் காப்புரிமை POURIA PAKIZEH/AFP/GETTY IMAGES

இரான்-இராக் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள வடக்கு எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 348 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்த புகைப்படங்களின் தொகுப்பு.

செய்தியை படிக்க:இரான்-இராக் நிலநடுக்கம்: புகைப்படத்தொகுப்பு

வீட்டு சமையலறையில் மனைவியுடன் மோதும் சமையல் கலைஞர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வீட்டு சமையலறையில் மனைவியுடன் மோதும் சமையல் கலைஞர்

குழந்தைகளை நடுவராக வைத்துக்கொண்டு, தன் மனைவியுடன் சமையல் போட்டியில் ஈடுபடுகிறார் ஒரு பிரபல சமையல் கலைஞர். போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதை அறிய விருப்பமா? இந்தக் காணொளியை பாருங்கள்.

கவுரவப் பட்டத்தை திருப்பித் தருகிறார் ஐரிஷ் பாடகர் கெல்டாஃப்!

படத்தின் காப்புரிமை EPA

மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில், டப்ளின் நகர சபை தனக்கு வழங்கிய கவுரவ பட்டத்தை, தாம் திருப்பித்தர போவதாக ஐரிஷ் பாடகர் பாப் கெல்டாஃப் கூறியுள்ளார்.

லெபனான் பிரதமர்: "சௌதியில் சுதந்திரமாக உள்ளேன்"

படத்தின் காப்புரிமை Reuters

தனது பதவி விலகலை முறையாக சமர்ப்பிக்க, ஓரிரு நாட்களில் லெபனான் திரும்ப உள்ளதாக, அந்நாட்டின் பிரதமர் சாத் ஹரிரி கூறியுள்ளார். தனது நாட்டுக்கு நேர்மறையான அதிர்ச்சி கொடுக்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

செய்தியை படிக்க:''செளதியில் சுதந்திரமாக இருக்கிறேன்; ஓரிரு நாட்களில் நாடு திரும்புவேன்''

அபுதாபியின் புதிய கலை அருங்காட்சியகம்!

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அபுதாபியின் புதிய கலை அருங்காட்சியகம்!

130 கோடி டாலர் செலவில் கட்டப்பட்ட அபுதாபியிலுள்ள புதிய கலை அருங்காட்சியகம் பற்றிய காணொளி.

ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையால் அகழவாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் கிராமத்தில் இருந்து பல முதுமக்கள் தாழிகள் மற்றும் மண்டைஓடுகள் கண்டெடுக்கப்பட்டு ஒரு தாசாப்தத்திற்கு பிறகும் கண்டுபிடிப்புகள் உள்ளுரில் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செய்தியை படிக்க:களியாட்டக் களமான ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையம்

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் சென்னை கவின் கல்லூரி மாணவர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் சென்னை கவின் கல்லூரி மாணவர்கள்

சென்னை எழும்பூரில் உள்ள கவின் கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை என்று கல்லூரி மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குஜராத் தேர்தல்: "மகத்தான கதையின் முன்பரிசோதனை"

படத்தின் காப்புரிமை SAM PANTHAKY/AFP/GETTY IMAGES

மகத்தான கதையை ஏற்கனவே பாஜக பிடித்துவிட்டது. தற்போது நாம் பார்க்கும் சிறிய போராட்டங்கள் கூட, ஜனநாயகத்திற்கு உயிர்துடிப்புள்ளது போல காண்பிக்கும், முன்பே இயற்றப்பட்ட ஒரு கேளிக்கையே.

செய்தியை படிக்க:குஜராத் தேர்தல்: "இது தேர்தலல்ல. மகத்தான கதைக்கான முன்பரிசோதனை"

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :