ஏன் இரானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது?

  • 14 நவம்பர் 2017
ஏன் இரானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது? படத்தின் காப்புரிமை Getty Images

இரான், நிலநடுக்கத்துக்கு பெயர்போன நாடு.

கடந்த காலங்களில் மோசமான நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டு இருக்கிறது.

பொதுவான மொழியில் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு பெரிய ஓட்டுனர்கள் தொடர்ந்து விபத்துக்கு உள்ளாகிறார்கள். அறிவியல் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அராபிய மற்றும் யுரேசியா டெக்டோனிக் தகடுகள் தொடர்ந்து மோதிக் கொள்கின்றன.

படத்தின் காப்புரிமை EPA

நாட்டின் தென் கிழக்கில், அரேபியா தகடுகள் யுரேசியா தகடுகளை தள்ளுகின்றன. ஆனால், வட மேற்கில் இந்த இரண்டு தகடுகளும் ஒன்றோடு ஒன்று நேரடியாக உரசிக் கொள்கின்றன, இந்த அழுத்தத்தினால்தாம் ஜாக்ரோஸ் மலை உருவானது.

முந்தைய அறிக்கைகள் இந்த நிலநடுக்கங்கள் மேல் ஓட்டின் ஊந்துதலினால் ஏற்படுகின்றன என்று கூறியது.

இப்போது புவியியல் முகமைகள் நிலநடுக்கத்தினால் ஏற்படபோகும் உயிரிழப்புகளை பட்டியலிடுகின்றன.

நிலநடுக்கத்தின் அளவு, மக்கள் தொகை, எப்படி நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் கட்டடம் கட்டப்பட்டு இருக்கிறது என்பதை வைத்து இதை வரையறுக்கின்றன.

இது துல்லியமான ஒன்றல்ல.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நேரலையில் பதிவான இரான்–இராக் நிலநடுக்க காட்சிகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்