பிபிசி தமிழில் 6 மணி வரை இன்று

  • 15 நவம்பர் 2017

பிபிசி தமிழில் மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராபர்ட் முகாபே

நகரின் வடக்கு புறநகர் பகுதியில், பயங்கர துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கிகளின் சத்தங்களும் கேட்டுள்ளது. ஆனாலும், இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து 93 வயதான அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவிடம் இருந்து இதுவரை எந்த வார்த்தையும் வரவில்லை.

செய்தியை படிக்க: 37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முகாபே ராணுவத்தின் பிடியில்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோயம்புத்தூரில் அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தது பெரும் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது.

செய்தியை படிக்க: பெரும் அரசியல் சர்ச்சையாக உருவெடுக்கும் ஆளுநரின் நடவடிக்கை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மனிதக் கழிவு ஆற்றலை சிறப்பாக பயன்படுத்தும் இந்திய கிராமம்

மனிதக் கழிவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் மூலம் பெறப்படும் நீரை வைத்து பணம் ஈட்டி அதில் கிராமப்புறங்களில் கழிவறைகளை இயக்கும் ஸ்ரீ சமூகத் தொழில் நிறுவனம் பற்றிய காணொளி.

இந்தியாவில் கழிப்பறை கட்டும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டிற்குள் திறந்தவெளிகளில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் இந்திய அரசு அரசு 2,000 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியை ஒதுக்கியிருக்கிறது.

செய்தியை படிக்க: மனிதக் கழிவுகளின் ஆற்றலில் இயங்கும் கழிவறைகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நிலநடுக்கத்தின் போது உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

நிலநடுக்கத்தின் போது உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பொது இடங்களில் வானவில் நிறக் கொடிகளை அசைத்தும், ஆடி பாடியும் கொண்டாடிய ஒரே பாலின ஆதரவாளர்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது அரசு, பாராளுமன்றத்தில் இதற்கான சட்டத்தை இயற்ற உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

செய்தியை படிக்க: ஒரே பாலின திருமணத்துக்கு ஆஸ்திரேலிய மக்கள் அமோக ஆதரவு

"என் பெற்றோர், இளவயதிலேயே எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். நீங்கள் அதை உங்களின் மகள்களுக்கு செய்யாதீர்கள்" என்று குழந்தை திருமணத்திற்கு எதிராக குரலெழுப்பும் சுனிதா தெரிவிக்கிறார்.

செய்தியை படிக்க: தனது திருமணத்தை துணிச்சலாக நிறுத்திய 12 வயது சிறுமி: போராளியாக மாறியது எப்படி?

படத்தின் காப்புரிமை KEYSTONE/HULTON ARCHIVE/GETTY IMAGES

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, அவரது கணவர் பெரோஸ் காந்தி உடனான உறவு மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால், பெரோஸ் காந்தி மறைந்த பிறகு இந்திரா எழுதிய கடிதம் ஒன்றில், தனக்கு தேவைப்பட்டபோதெல்லாம், பெரோஸ் துணை நின்றார் என்று குறிப்பிட்டிருந்தார்.

செய்தியை படிக்க: இந்திரா- பெரோஸ் காந்தி வாழ்க்கையில் அடிக்கடி முரண்பாடு ஏற்பட்டது ஏன்?

படத்தின் காப்புரிமை Getty Images

எதிர் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலின் போது தேசிய அடையாள அட்டை இல்லாதமை காரணமாக மூன்று லட்சம் பேர் வரையிலான நபர்களுக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஆள்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. குணதிலக்க தெரிவித்துள்ளார்.

செய்தியை படிக்க: இலங்கை உள்ளூராட்சி தேர்தல்: 3 லட்சம் பேர் வாக்களிக்க முடியாத அபாயம்

படத்தின் காப்புரிமை GOOGLE MAPS

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் ஊரகப் பகுதி ஒன்றில் பள்ளி உள்பட பல இடங்களில் துப்பாக்கிதாரி ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

செய்தியை படிக்க: கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: கலிபோர்னியாவில் நால்வர் பலி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இழந்த மார்பகத்திற்கு குறைந்தபட்ச மாற்றை வேறுவிதமாக வழங்க முயலும் குழு

மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், இந்நோயால் தங்கள் துணையை இழந்தோர், மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்க விரும்புகிற மாற்று என்ன என்பதை அறிய இந்தக் காணொளியை பாருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :