பிபிசி தமிழில் 10 மணி வரை இன்று

பிபிசி தமிழில் இரவு 10 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

துப்பாக்கிதாரியிடமிருந்து குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

ஆசிரியர்கள் பள்ளியை பூட்டிவிட்டதை தெரிந்து ஆத்திரமடைந்தாவக்வும், ஆறு நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

செய்தியை படிக்க: கலிஃபோர்னியா: துப்பாக்கிதாரியிடமிருந்து குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர்கள்

வீட்டுச்சிறையில் முகாபே

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராபர்ட் முகாபே

நகரின் வடக்கு புறநகர் பகுதியில், பயங்கர துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கிகளின் சத்தங்களும் கேட்டுள்ளது. ஆனாலும், இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து 93 வயதான அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவிடம் இருந்து இதுவரை எந்த வார்த்தையும் வரவில்லை.

செய்தியை படிக்க: 37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முகாபே வீட்டுக்காவலில்

ராணுவ ஆட்சியை நோக்கி செல்கிறதா ஜிம்பாப்வே?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ராணுவ ஆட்சியை நோக்கி செல்கிறதா ஜிம்பாப்வே?

ஜிம்பாப்வே அதிபரான முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரை சுற்றியுள்ள குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை குறிவைத்து ராணுவம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது. இது குறித்த காணொளி.

ஆளுநர் நடவடிக்கையால் சர்ச்சை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோயம்புத்தூரில் அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தது பெரும் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது.

செய்தியை படிக்க: பெரும் அரசியல் சர்ச்சையாக உருவெடுக்கும் ஆளுநரின் நடவடிக்கை

மனிதக் கழிவு ஆற்றலை சிறப்பாக பயன்படுத்தும் இந்திய கிராமம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மனிதக் கழிவு ஆற்றலை சிறப்பாக பயன்படுத்தும் இந்திய கிராமம்

மனிதக் கழிவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் மூலம் பெறப்படும் நீரை வைத்து பணம் ஈட்டி அதில் கிராமப்புறங்களில் கழிவறைகளை இயக்கும் ஸ்ரீ சமூகத் தொழில் நிறுவனம் பற்றிய காணொளி.

மனிதக் கழிவுகளின் ஆற்றலில் இயங்கும் கழிவறைகள்

இந்தியாவில் கழிப்பறை கட்டும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டிற்குள் திறந்தவெளிகளில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் இந்திய அரசு அரசு 2,000 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியை ஒதுக்கியிருக்கிறது.

செய்தியை படிக்க: மனிதக் கழிவுகளின் ஆற்றலில் இயங்கும் கழிவறைகள்

பூகம்பத்திலிருந்து பாதுகாத்துகொள்வது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நிலநடுக்கத்தின் போது உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

ஒரே பாலின திருமணம்: ஆஸ்திரேலியர்கள் அமோக ஆதரவு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பொது இடங்களில் வானவில் நிறக் கொடிகளை அசைத்தும், ஆடி பாடியும் கொண்டாடிய ஒரே பாலின ஆதரவாளர்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது அரசு, பாராளுமன்றத்தில் இதற்கான சட்டத்தை இயற்ற உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

செய்தியை படிக்க: ஒரே பாலின திருமணத்துக்கு ஆஸ்திரேலிய மக்கள் அமோக ஆதரவு

குழந்தை திருமணத்திற்கு எதிராக குரலெழுப்பும் சுனிதா

"என் பெற்றோர், இளவயதிலேயே எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். நீங்கள் அதை உங்களின் மகள்களுக்கு செய்யாதீர்கள்" என்று குழந்தை திருமணத்திற்கு எதிராக குரலெழுப்பும் சுனிதா தெரிவிக்கிறார்.

செய்தியை படிக்க: தனது திருமணத்தை துணிச்சலாக நிறுத்திய 12 வயது சிறுமி: போராளியாக மாறியது எப்படி?

இந்திரா- பெரோஸ் காந்தி: வாழ்க்கை

படத்தின் காப்புரிமை KEYSTONE/HULTON ARCHIVE/GETTY IMAGES

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, அவரது கணவர் பெரோஸ் காந்தி உடனான உறவு மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால், பெரோஸ் காந்தி மறைந்த பிறகு இந்திரா எழுதிய கடிதம் ஒன்றில், தனக்கு தேவைப்பட்டபோதெல்லாம், பெரோஸ் துணை நின்றார் என்று குறிப்பிட்டிருந்தார்.

செய்தியை படிக்க: இந்திரா- பெரோஸ் காந்தி வாழ்க்கையில் அடிக்கடி முரண்பாடு ஏற்பட்டது ஏன்?

இலங்கை உள்ளாட்சி தேர்தல்

படத்தின் காப்புரிமை Getty Images

எதிர் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலின் போது தேசிய அடையாள அட்டை இல்லாதமை காரணமாக மூன்று லட்சம் பேர் வரையிலான நபர்களுக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஆள்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. குணதிலக்க தெரிவித்துள்ளார்.

செய்தியை படிக்க: இலங்கை உள்ளூராட்சி தேர்தல்: 3 லட்சம் பேர் வாக்களிக்க முடியாத அபாயம்

உறுப்பு தான பற்றாக்குறையால் தவிக்கும் பிரிட்டன் சிறுபான்மை மக்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உறுப்புதான பற்றாக்குறையால் தவிக்கும் பிரிட்டன் சிறுபான்மை மக்கள்

பிரிட்டனில் உறுப்பு தானம் செய்யும் இன சிறுபான்மையினருக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. வெள்ளை இனத்தவர்களை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக கருப்பினத்தவர்களின் உறுப்புகள் செயலிழக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதை அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இழந்த மார்பகத்திற்கு குறைந்தபட்ச மாற்றை வேறுவிதமாக வழங்க முயலும் குழு

மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், இந்நோயால் தங்கள் துணையை இழந்தோர், மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்க விரும்புகிற மாற்று என்ன என்பதை அறிய இந்தக் காணொளியை பாருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :