'தாவூத் இப்ராஹிமிடமிருந்து வந்த மிரட்டல்' - ஒரு செய்தியாளரின் அனுபவம்

தாவூத் இப்ராஹிம் படத்தின் காப்புரிமை Sajjad Hussain / AFP / Getty Images
Image caption தாவூத் இப்ராஹிம்

நான் தொலைபேசியை எடுத்தபோது எதிர்திசையிலிருந்து அலட்சியமான குரல் வந்தது. அவர், "தொடர்பிலேயே இருங்கள்... பெரிய அண்ணன் பேசுவார்" என்றார். அந்த அழைப்பாளர் சோட்டா ஷகில்.

என் அருகே அமர்ந்திருந்த அவுட்லுக் இதழின் மூத்த செய்தியாளர் அஜித் பிள்ளை அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த அறையில் இருந்த அனைவரும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது சாதரண அழைப்பு அல்ல. தினம் வரக் கூடியதும் அல்ல என்பது அங்கு இருந்த அனைவருக்கும் தெரியும். தொலைபேசி உரையாடல் கொஞ்சம் பிசகினாலும், 'டெல்லியில் பத்திரிகையாளர் கொலை' என்பது தலைப்புச் செய்தியாகும்.

சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த தொலைபேசியில் மற்றொருவரின் குரல் கேட்டது. எதுவும் கேட்காமல், குறிப்பாக என் பெயரை கேட்காமல் அவர் பேச தொடங்கினார். அவர் கூறினார், "நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள். என்னை போதை மருந்து தொழில் செய்பவன் என்று எழுதி இருக்கிறீர்கள். போதைப் பொருட்கள் என் மதத்தில் தடை செய்யப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாதா? எனக்கு உலக முழுவதிலும் ரியல் எஸ்டேட் தொழில் இருக்கிறது. ஆனால், நீங்கள் என்னை போதை மருந்து தொழில் செய்பவன் என்கிறீர்கள்" என்றார் அவர்.

அந்த அவர் தாவூத் இப்ராஹிம். தாவூத், மும்பை நிழலுகத்தின் அரசனாக இருந்தவர். மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் காரணகர்த்தா. இந்தியாவின் முக்கியமான எதிரி.

போதை மருந்து தொழில்:

அந்த வாரத்தில்தான், அவுட்லுக் இதழின் செய்தியாளர்களான அஜித் பிள்ளையும், சாருலதா ஜோஷியும் இணைந்து , போலீஸ் சொன்ன தகவல்களை வைத்து ரூபாய் 2000 கோடி மதிப்பில் தாவூத் போதை மருந்து தொழில் செய்துக் கொண்டிருப்பதாக கட்டுரை எழுதி இருந்தார்கள். அந்த கட்டுரைக்கான எதிர்வினைதான் இது.

நமக்கு நன்கு தெரிந்தவர்களிடம் நாம் பேசுவது போல, நான் அவரிடம் பேச முயற்சித்தேன், "தாவூத் அண்ணா" என்று என் உரையாடலை தொடங்கினேன்.

படத்தின் காப்புரிமை Sebastian D'souza / AFP / Getty Images

பத்திரிக்கையாளர் தொழில் என்பது இத்தகையதுதான். அவர்கள் பரபரப்பான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தொடக்க காலத்தில், மூத்த போலீஸ் அதிகாரியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தால் தனது பதவி பற்றி நிருபர் மகிழ்ந்துபோவார். பிறகு சிறிய தலைவர்களின் அழைப்புகள் வரத் தொடங்கி, அப்படியே தொடர்ந்து பெரிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் என விரிவடையும். அதே சமயத்தில் மக்களின் பார்வையில் மதிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனது பதவியை பணியைப் பற்றி பத்திரிகையாளர்களின் மனதில் பெருமை அதிகரிக்கும்.

இந்த நிலைமையில் ஒரு 'டான்' (தாதா), அவரை நாடு முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகள் தேடுகின்றனர், இன்டர்போல் அவர் மீது 'ரெட் கார்னர் நோட்டீஸ்' (சர்வதேச கைது வாரண்டு) வெளியிட்டிருக்கிறது, அவரைப் பற்றி அடிக்கடி செய்திகள் வெளியிடப்படுகிறது. அந்த டான், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் பாதுகாப்பில், காராச்சியில் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்.  அவர் தனது கையாள் மூலமாக அழைக்காமல் ஒரு நிருபரை தானே நேரடியாக தொலைபேசியில் அழைத்து விளக்கம் கேட்கிறார் என்றால், நிலைமையை நீங்களே யோசித்து பாருங்கள்.

அச்சுறுத்திய தாவூத்:

குரலில் கொஞ்சம் அலட்சியம் தெரிந்தாலும் அது எனக்கே ஆபத்தாக முடியலாம். நான் பொறுமையாக, "தாவூத் அண்ணா... நாங்கள் எழுதியதில் தவறு இருப்பதாக நீங்கள் நினைத்தீர்கள் என்றால், எங்களுக்கு நீங்கள் உங்கள் தரப்பு விளக்கத்தை அனுப்புங்கள். நாங்கள் அதை பிரசுரிக்கிறோம்." என்றேன்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல், என் பேச்சை இடைமறித்து தாவூத் நேரடியாக விஷயத்துக்கு வந்தார் , "நான் உங்களுக்கு எட்டு நாள் அவகாசம் தருகிறேன்" என்றார். என் முதுகுதண்டு சில்லிட்டது. அவரே தொடர்ந்து, "எட்டு நாட்களில் என் தரப்பு விளக்கத்தை நீங்கள் அவுட்லுக் இதழில் பிரசுரிக்கவில்லை என்றால் நடப்பதே வேறு" என்றார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
March 12, 1993: Black Friday of Mumbai

தாவூதுக்கு இது வழக்கமான ஒரு விஷயம் மற்றும் அவருக்கு அலுப்பு தரும் விஷயமும் கூட. அவரும், அவருடைய ஆட்களும் தொழிலதிபர்களுக்கு, திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு இது போன்ற மிரட்டல்களை பல முறை விடுத்திருக்கிறார்கள்.

மீண்டும் அவரிடம் பேச முயற்சித்தேன், "அண்ணா, உங்களுடைய விளக்கத்தை நீங்கள் ஒரு மணி நேரத்தில் அனுப்பிவிட்டீர்கள் என்றால், வரும் இதழிலேயே அதை பிரசுரிப்போம்" என்றேன்.

படத்தின் காப்புரிமை PTI

தாவூத்தின் மருமகன் சாகில் பேசினார், "ஒரு மணி நேரத்தில் எங்களுடைய விளக்கத்தை தொலைநகலில் அனுப்பி வைக்கிறோம். உங்களுடைய ஆசிரியரிடம் அதை காண்பியுங்கள்" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

இந்த மொத்த உரையாடலும் அவுட்லுக்கின் ஆசிரியர் விநோத் மேத்தாவின் அறைக்கு வெளியே நடந்தது. தாவூத்தின் மிரட்டலை நாம் சாதரணமாக எடுத்துக் கொள்ளகூடாது. இந்த உரையாடலை முழுவதுமாக ஆசிரியரிடம் சொல்ல முடிவு செய்தோம்.

தாவூத் அளித்த விளக்கம்:

படத்தின் காப்புரிமை Penguin
Image caption விநோத் மேத்தா

விநோத் மேத்தாவை அறிந்தவர்களுக்கு அவரின் குணம் நன்கு தெரியும். அவருடைய கவனத்தை 10 விநாடிகளுக்கு மேல் ஈர்ப்பது மிகவும் கடினம். அது தாவூத் இப்ராஹிமாக இருந்தாலும் சரி.

இந்த விஷயத்தை அவரிடம் சொன்னோம்.

இவ்வளவுதானா...? அவருடைய விளக்கம் வரும்போது அதை பிரசுரித்துவிட்டு, இதை கடந்து செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் பணியில் மூழ்கினார்.

இந்த சம்பவம் நடந்தது 1997-ம் ஆண்டு. அப்போதெல்லாம் இப்போதுள்ளதுபோல கைபேசிகள் இல்லை. தொலைதொடர்பு அவ்வளவு சுலபமானதாக இல்லை. மொத்த அலுவலகமும் அந்த தொலைநகல் இயந்திரம் அருகே கூடி, அந்த ஒற்றை தொலைநகலுக்காக காத்திருந்தது.

அந்த தொலைநகல் வந்தது. அது மூன்று பக்கங்களை கொண்டிருந்தது. அது அவுட்லுகில் தாவூத் குறித்து வந்த அந்த கவர் ஸ்டோரியை மறுத்தது.

விநோத் மேத்தாவிடம், தாவூதிடமிருந்து வந்திருந்த அந்த மறுப்பை காட்டியபோது, அவர் உடனடியாக தலைப்பு கொடுத்தார். அந்த தலைப்பு, 'அவுட்லுக் கட்டுரைக்கு தாவூத் இப்ராஹிமின் எதிர்வினை!'. அந்த மூன்று பக்க மறுப்பு அறிக்கையையும் கேள்வி-பதில் வடிவத்தில் பிரசுரித்தோம்.

அடுத்த நாள் தாவூத்தின் ஆளான, சங்கரிடமிருந்து அழைப்பு வந்தது. "பெரிய அண்ணன் மகிழ்ச்சியாக இருக்கிறார். கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள்.. உங்களை தொலைபேசியில் சுட்டுவிடமாட்டேன்" என்றார்.

அது கடைசி அழைப்பு அல்ல. ஷகிலிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. சரி விடுங்கள், அதை பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்