வீடில்லா மனிதருக்கு வீடும், வேலையும் வழங்கிய ஃபேஸ்புக் பதிவு

வீடில்லாமல் வீதியில் வாழ்ந்து வந்த ஒருவருக்கு ஏதாவது நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென ஒருவர் பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவுக்கு பின்னர், வீதியில் வாழ்ந்து வந்த அவருக்கு தங்குவதற்கு இடமும், வேலையும் கிடைத்துள்ளது.

இரவில் வெளியே சென்றிருந்த ஷான் ஷார்க்கி, லீஸ்செஸ்டர்ஷைரின் மெல்டன் மௌப்ரெயில், வாயிற்படியில் தூங்கிக்கொண்டிருந்த மைக்கேல் பீக்ஸூன் அளவளாவ தொடங்கினார்.

வெள்ளிக்கிழமை இரவை எல்லோரும் கொண்டாடி கொண்டிருக்கும் நிலையை எண்ணிய ஷார்க்கி, அந்த நபருக்கு உதவுவதற்கு முயற்சி செய்ய முடிவெடுத்தார்.

அந்த நபருக்கு உதவுவதற்கு முன்வர வேண்டும் என்று வெள்ளிக்கிழமை ஷார்க்கி ஃபேஸ்புக்கில் பதிவிட்ட 20 மணிநேரத்திற்குள், ஒருவரின் வீட்டில் பீக்ஸ் தங்குவதங்கு ஓர் அறை வழங்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் அவருக்கு வேலையும் கிடைத்துள்ளது.

5 மாதங்களுக்கு முன்னர் சிறையைவிட்டு வெளிவந்த பின்னர் வீடற்றவராக வாழந்து வரும் பீக்ஸ், "இது திரைப்படங்களில் பார்ப்பது போல் இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

"நான் இணையத்தில் உலா வந்தது கிடையாது. எனவே, ஃபேஸ்புக் பற்றி எனக்கு அதிகமாக தெரியாது" என்று அவர் கூறியுள்ளார்.

"அடுத்த நாள் மக்கள் என்னிடம் வந்து, 'நாங்கள் எவ்வாறு உங்களுக்கு உதவலாம்' என்று கேட்க தொடங்கியதுவரை இதுபோல நடக்கும் என்று தான் எண்ணி பார்த்த்தே கிடையாது" என்று அவர் ஆச்சரியமாக தெரிவித்திருக்கிறார்.

"இந்த ஃபேஸ்புக் பதிவு முற்றிலும் எதார்த்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று ஷார்க்கி கூறியிருக்கிறார்.

Image caption சமூகம் காட்டியுள்ள எதிர்வினை ஆச்சயப்படுத்துகிறது என்று ஷார்க்கி தெரிவித்திருக்கிறார்.

"இந்த உள்ளூர் சமூகம் உண்மையிலேயே செயல்பட்டு, 20 மணிநேரத்திற்குள் இந்த மனிதருக்கு தங்குவதற்கு இடமும், வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

"இதுவொரு ஆச்சரியமான சமூக செயல்பாடு. இது இந்த மனிதருக்கு சிறந்த சாத்தியபடுகின்ற வாய்ப்பை வழங்கியுள்ளது" என்று சார்க்கி குறிப்பிட்டுள்ளார்.

Image caption வாகனம் நிறுத்துமிடத்தில் பீக்ஸ் பணிபுரிய தொடங்கிவிட்டார்.

பீக்ஸூக்கு வேலை வழங்கிய விதாம் வாகன நிறுத்துமிடத்தின் கிரஹாம் லிம்பிர்க் என்பவர், அவர் மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

"அவர் தன்னுடைய வாழ்க்கையில் உழைத்து வாழ விரும்புகிறார். என்னை பொறுத்தவரை அவர், தினமும் காலையில் எழுந்து, வேலைக்கு வந்து, வாழ்க்கைக்காக உழைக்க விரும்புகின்ற உறுதியை கொண்டிருப்பவராக தோன்றுகிறார் என்று கிரஹாம் லிம்பிர்க் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்