பிபிசி தமிழில் இரவு 10 மணி வரை இன்று

பிபிசி தமிழில் இரவு 10 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மானுஷி சில்லர்

படத்தின் காப்புரிமை @MISSWORLDLTD

இந்தியாவைச் சேர்ந்த 20 வயதாகும் மானுஷி சில்லர், 2017-ஆம் ஆண்டிற்கான 'மிஸ் வோர்ல்டு' எனப்படும் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.

செய்தியை படிக்க: உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மானுஷி சில்லர்

பின்வாங்கினார் டிரம்ப்

படத்தின் காப்புரிமை SPL

ஜாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் வேட்டையாடிய யானையின் உடல் பாகங்களை அமெரிக்கா இறக்குமதி செய்வதற்கு ஒபாமா காலத்தில் விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்.

செய்தியை படிக்க: வேட்டையாடிய யானை உறுப்புகளை இறக்குமதி செய்யும் விவகாரம்: பின்வாங்கினார் டிரம்ப்

நவீன துபாய்: ரத்தமும் வேர்வையும் சிந்திய இந்தியர்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

பாலைவனத்தில் கட்டப்பட்டிருக்கும் அதன் உயரமான கட்டடங்கள் விண்னைம்மூட்டும் அளவுக்கு உள்ளன. நிலவொளியைப் போல அதன் கண்ணாடி கட்டடங்கள் மின்னுகின்றன. தங்கள் குடும்பத்தையும் நாட்டையும் விட்டுவிட்டு, வேறு ஒருவரின் நாட்டைக் கட்டமைக்கச் சென்ற ஏழை இந்தியர்களின் உழைப்புக்கு அவை சாட்சியங்களாக இருக்கலாம்.

செய்தியை படிக்க: நவீன துபாயை கட்டமைக்க ரத்தமும் வேர்வையும் சிந்திய இந்தியர்கள்

பிரிட்டனில் விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்து

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் மகிழ்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. அதிபர் முகாபே பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கேட்டுவரும் நிலையில், அவரின் கடுமையான ஆட்சியை ராணுவம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அவர்கள் கொண்டாடுகின்றனர்.

செய்தியை படிக்க: பிரிட்டனில் விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்து: நால்வர் பலி

குட்டிக்கரணம் அடிக்கும் மனித வடிவ ரோபோவை நீங்கள் பார்த்ததுண்டா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
'அட்லஸ்' என்று பெயர் இடப்பட்டுள்ள இந்த மனித உருவுள்ள ரோபோ

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் டயனமிக்ஸ் நிறுவனத்தால் இந்த ரோபோ தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

வடகொரியாவில் இருந்து தப்பி தென் கொரியாவுக்கு வந்த ராணுவ வீரர் குடலில் ஏராளமான ஒட்டுண்ணிப் புழுக்கள் இருந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

செய்தியை படிக்க: வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்

"நண்பர்களை கொல்லாமல் தவிர்க்க ஐ.எஸ்-யை விட்டு வெளியேறினேன்"

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“நண்பர்களை கொல்லாமல் தவிர்க்க ஐ.எஸ்-யை விட்டு வெளியேறினேன்”

"நண்பர்களை கொல்லாமல் தவிர்க்க ஐ.எஸ்-யை விட்டு வெளியேறினேன்" - இளைஞர் ஒருவரின் சாட்சியம்.

காலியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்

இலங்கையில் காலி மாவட்டத்தில் கின்தொட்ட பகுதியில் இனங்களுக்கிடையில் பதற்ற நிலை ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறப்பு அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியை படிக்க: இலங்கை: காலியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்

ஜிம்பாப்வே: அதிபர் அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்

படத்தின் காப்புரிமை EPA

தனது மனைவியும், தன்னைவிட 40ஆண்டுகள் சிறியவருமான கிரெஸ் முகாபே, அடுத்த அதிபர் ஆவதற்கு வழிவகுப்பதற்காக, நாட்டின் துணை அதிபரான எமர்சன் மனங்காக்வுவாவை கடந்த வாரம், பதவியிலிருந்து நீக்கினார் முகாபே.

செய்தியை படிக்க: ஜிம்பாப்வே: அதிபர் அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்

போயஸ் கார்டன் சோதனை குறித்து இணையவாசிகள் கேலி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்துவந்த, சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள 'வேதா நிலையம்' இல்லத்தில் நேற்றிரவு சுமார் 9 மணிமுதல் அதிகாலை 2 வரை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

செய்தியை படிக்க: "புளியோதரை பிரசாதமாவது கிடைச்சுதா?" - போயஸ் கார்டன் சோதனை குறித்து இணையவாசிகள் கேலி

இந்திய உச்ச நீதிமன்றம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?

படத்தின் காப்புரிமை Reuters

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீதான ஊழல் குற்றச்சாட்டினை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாக அசாதாரணமான நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தில் நடந்தன.

செய்தியை படிக்க: இந்திய உச்ச நீதிமன்றம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?

அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று இந்திரா விரும்பினார்?

படத்தின் காப்புரிமை STF/AFP/GETTY IMAGES

கம்பீரமான, அதிகாரம் பொருந்திய ஒருவராகவே பெரும்பாலும் இந்திரா காந்தி பார்க்கப்படுகிறார். இயல்பானவர், பழகுவதற்கு இனிமையானவர் என்றோ, பிறரை கவரும் நபராகவோ அல்லது பிறர் மீது அக்கறை கொண்டவராகவோ இந்திரா காந்தி பார்க்கப்படவில்லை.

செய்தியை படிக்க: அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று இந்திரா விரும்பினார்?

சங்க பரிவாரத்தின் ஒற்றையாட்சிக் கனவுக்கான பரிசோதனைக் களமா?

படத்தின் காப்புரிமை Getty Images

அண்மையில் கோவைக்குச் சென்றிருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புராஹித் நேரடியாக அரசு அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டது தொடர்பாக எழுந்திருக்கிற சர்ச்சை எதிர்பார்த்த ஒன்றுதான்.

செய்தியை படிக்க: தமிழ்நாடு: சங்க பரிவாரத்தின் ஒற்றையாட்சிக் கனவுக்கான பரிசோதனைக் களமா?

தமிழக நடிகர்களுக்கு அரசியல்வாதிகளை எதிர்க்கும் துணிச்சல் எப்படி வருகிறது?

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசை விமர்சித்து பேசியது, மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசை விமர்சித்த காட்சிகளுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் பேசியபோது, அத்திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு ஆதரவாக தென் இந்திய நடிகர்கள் மற்றும் திரைத்துறையினர் குரல் எழுப்பியது உள்ளிட்ட விடயங்களில் தென்னிந்திய நடிகர்கள் அரசியல்வாதிகளை எதிர்த்து பேசி வருகிறார்கள்.

செய்தியை படிக்க: தமிழக நடிகர்களுக்கு அரசியல்வாதிகளை எதிர்க்கும் துணிச்சல் எப்படி வருகிறது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :