சீனா: குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலி

தீ விபத்து படத்தின் காப்புரிமை Reuters

சீன தலைநகர் பெய்ஜிங்கின் தென் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியானதோடு, எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தீயணைப்புத்துறையினர் பல மணிநேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.

தீ பற்றியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இருந்தபோதிலும், காவல்துறையினர், ஒரு சிலரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டக்சிங் மாவட்டத்தில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடம், உள்மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்த ஊழியர்கள், குறைந்த செலவில் தங்கும் இடமாகும்.

விபத்து ஏற்பட்ட பகுதி, பல துணி ஆலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது.

14 தீயணைப்புக்குழுவில் உள்ள முப்பதிற்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மூன்று மணிநேரத்திற்கும் மேல் போராடி, தீயை அணைத்தனர்.

படத்தின் காப்புரிமை AFP
படத்தின் காப்புரிமை AFP

கட்டத்தில் சிக்கியிருந்த சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, தீயணைத்துறை தெரிவித்துள்ளது.

நகர சாலைகளில் ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என அரசு அறிவித்தள்ளது, நகரை மெருகேற்றும் பிரச்சாரம் குறித்த சிக்கலான நிலை உள்ள சூழலில், இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த பிரச்சாரம், புலம் பெயர்ந்த ஊழியர்களை இன்னும் நகரத்தை விட்டு வெளியே அனுப்புகிறது என்கின்றனர் உரிமைகளுக்கான பிரச்சாரகர்கள்.

ஆட்களை கொல்லும் தீவிபத்துகள் என்பது சீனாவில் தொடர்ந்து நடப்பதே. அந்நாட்டில், பாதுகாப்பு விதிமுறைகள் அவமதிக்கப்படுவதோடு, அமலாக்கத்துறையின் விதிகளும் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கின்றன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்