சிரியா: அல்பு கமல் பகுதியை கைப்பற்றியது ராணுவம்

கோப்புப் படம் படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES
Image caption கோப்புப் படம்

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவால், சிரியாவில் கைப்பற்றப்பட்டிருந்த கடைசி புறநகர் பகுதியான அல்பு கமலை, சிரிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய ராணுவம், ஐ.எஸ் குழுவை, அல்பு கமல் பகுதியின் கிழக்கில் உள்ள இடத்திலிருந்து, விரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில், சிரிய ராணுவம், அல்பு கமல் பகுதியை கைப்பற்றியது.

எனினும், அதற்கு பதில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் அமைப்பு மீண்டும் அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

பல நாட்கள் தொடர் சண்டைக்குப் பிறகு, அரசின் ராணுவமும், அதன் கூட்டுப்படைகளும், அப்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர் என்று, சிரிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிளர்ச்சியாளர்கள், தற்போது, இராக்கிற்கு அருகாமையில் உள்ள சிரியாவின் புறநகர் பகுதியை மட்டும் அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உணவின்றி பரிதவிக்கும் சிரியா குழந்தைகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்