பிபிசி தமிழில் இன்று

பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

உலக அழகி பட்டத்துடனே இந்தியா திரும்புவேன்' - முன்பே சூளுரைத்த மானுஷி சில்லர்

படத்தின் காப்புரிமை Getty Images

உலக அழகிப் பட்டம் வென்றிருக்கும் மானுஷி சில்லர், இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சீனா கிளம்பும்போதே வெற்றி மகுடம் சூடிவருவேன் என நம்பிக்கையுடன் சென்றதாக சொல்கிறார் மானுஷியின் தாய்வழி தாத்தா.

செய்தியை படிக்க:'உலக அழகி பட்டத்துடனே இந்தியா திரும்புவேன்' - முன்பே சூளுரைத்த மானுஷி சில்லர்

ஏசுவின் சீடர் என்று தன்னை அழைத்துக்கொண்டவர் மரணம்

படத்தின் காப்புரிமை Getty Images

சார்ல்ஸ் மேன்சன், ஒரு காலத்தில் ஒரு தனி வழிபாட்டுக் குழுவின் தலைவராக இருந்தவர். தனது சீடர்களை தொடர் கொலைகள் செய்ய சொல்லி வலியுறுத்தியவர். எதிர்கலாச்சாரம் என்று அழைக்கப்பட்ட, 1960-ல் நடைமுறையில் இருந்த சமூக மதிப்பீடுகளுக்கு எதிரான கலாச்சாரத்தின் கருப்பு பக்கத்தின் முகமாக இருந்தவர், தன்னுடைய 83 வயதில் இறந்துள்ளார்.

செய்தியை படிக்க:ஏசுவின் சீடர் என்று தன்னை அழைத்துக்கொண்டவர் மரணம்

'இரண்டு நாட்களில் முகாபே நீக்கப்படுவார்'': ஆளும் கட்சியினர் உறுதி

படத்தின் காப்புரிமை Getty Images

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிரான குற்றச்சாட்டு நடவடிக்கைகளை ஆளும் சானு பி.எஃப் கட்சி செவ்வாய்கிழமை தொடங்க உள்ளது.

செய்தியை படிக்க:''இரண்டு நாட்களில் முகாபே நீக்கப்படுவார்''

42 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் தாய்மண் திரும்பிய எலும்புக்கூடு

படத்தின் காப்புரிமை Getty Images

1974இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்புக்கூடு, ஆஸ்திரேலியாவின் வரலாற்றையே மாற்றி எழுத காரணமாக இருந்தது.

செய்தியை படிக்க: ஆஸ்திரேலியா: 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் தாய்மண் திரும்பிய எலும்புக்கூடு

உங்களால் காகிதத்தை 13 முறை மடிக்க முடியுமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உங்களால் காகிதத்தை 13 முறை மடிக்க முடியுமா?

ஒரு காகிதத்தை பன்னிரெண்டு முறை மடித்து உலக சாதனை படைத்த பிரிட்னியின் சவாலை முறியடிக்கும் முயற்சி. சாதனை முறையடிக்கப்பட்டதா இல்லையா?

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜரானார் இலங்கை பிரதமர் ரணில்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை ஆஜரானார்.

செய்தியை படிக்க: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜரானார் இலங்கை பிரதமர் ரணில்

உலகம் தட்டையா? உருண்டையா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உலகம் தட்டையா? உருண்டையா?

உலகம் தட்டையானது என்கின்றனர் இந்த குழுவினர். அதை நிரூபிக்க, ஒரு எடுத்துக்காட்டையும் இவர்கள் கூறுகிறார்கள்.

அன்றைய இந்திரா - இன்றைய மோடி: "இருவருக்கும் ஒரே முகமா?"

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னாள் இந்திய பிரதமரான இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் இன்று. இன்றைய காலக்கட்டத்தில் இந்திரா போன்ற ஒரு தலைவரின் தேவை அவசியமா? அல்லது இன்றைய இந்தியாவுக்கு இந்திராவின் அணுகுமுறை அவசியம் இல்லை? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

செய்தியை படிக்க: அன்றைய இந்திரா - இன்றைய மோடி: "இருவருக்கும் ஒரே முகமா?"

வவுனியா வர்த்தக நிலையங்களில் தீ

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக நிலைய தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வர்த்தக நிலையங்கள் முழுமையாக தீக்கிறையாகியுள்ளன.

செய்தியை படிக்க:வவுனியா வர்த்தக நிலையங்களில் தீ : திட்டமிட்ட சதி முயற்சி என குற்றச்சாட்டு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :