பிபிசி தமிழில் இன்று...

பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது மற்றும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட வீரர்கள் அடங்கிய பட்டியலில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வானது எனது கனவின் முதல்படி: விஜய் சங்கர்

படத்தின் காப்புரிமை AFP
Image caption எமர்சன் முனங்காக்வா முன்னர் ராபர்ட் முகாபேயின் முக்கிய கூட்டாளியாக இருந்தார்.

ஜிம்பாப்வேயில் நீண்டகாலம் அதிபராக இருந்த ராபர்ட் முகாபேவினால் துணை அதிபர் பதவியில் இருந்து இருவாரங்கள் முன்பு நீக்கப்பட்ட எமர்சன் முனங்காக்வா, அந்நாட்டின் புதிய அதிபராக சில மணிநேரங்களில் பதவியேற்கக்கூடும் என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.

ஜிம்பாப்வே: முகாபேக்கு பிறகு அதிபராகிறார் முனங்காக்வா?

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும் கட்சிக்குள் பிரச்சனை நீடித்து வருவதாக பரவலாக பேசப்பட்ட விடயம் தற்போது அக்கட்சியின் மாநிலங்களவை எம்பி மைத்ரேயனின் முகநூல் பதிவுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

அதிமுகவுக்குள் என்ன நடக்கிறது? சர்ச்சை கிளப்பும் மைத்ரேயன்

குஜராத் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.

குஜராத் தேர்தல்: கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு?

பிபிசி வட கொரியா ராணுவத்திலிருந்து தப்பி அண்டை நாடுகளில் அடைக்கலமான லீ சோ இயோனிடமும் வேறு சிலரிடமும் நேர்காணல் எடுத்தது. அதன் தொகுப்பு.

பாலியல் வல்லுறவு, மாதவிடாய் இல்லாமை - இதுதான் வடகொரிய ராணுவத்தில் பெண்களின் நிலை

வலதுசாரி இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும், சாதிய குழுக்களும் நாடெங்கும் பத்மாவதி திரைப்பட வெளியீட்டுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

பத்மாவதி திரைப்பட பிரச்சனையின் முழுப் பின்னணி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்