சீன இணையதளம் மூலம் ஏலத்தில் விற்பனையான போயிங் விமானங்கள்

போயிங் 747 ஜம்போ விமானங்கள் இரண்டு 320 மில்லியன் யுவானுக்கு (36 மில்லியன் பவுண்ட்) இணையதளம் மூலம் விற்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை TAOBAO.COM

செயல்படாமல் போன சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் இந்த ஜம்போ விமானங்களை, நிறுவனங்கள் திவால் ஆவதை கையாளும் நீதிமன்றம் பல ஆண்டுகளாக இவற்றை விற்பதற்கு முயன்று வந்தது.

இவற்றை ஏலமிடும் முந்தைய 6 முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. எனவே அவற்றை இணையதளம் மூலம் விற்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

இந்த விமானங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டிய 25 பேரை தோற்கடித்து அதிக தொகை வைத்தவரும், புதிய பெருமைக்குரிய உரிமையாளரும் சீன சரக்குப் போக்குவரத்து நிறுவனமான எஸ்எஃப் ஏர்லயன்ஸ் ஆகும்.

இபே (eBay) போல தாவ்போ என்பது இணைய வழி ஏலத்தில் விடுக்கின்ற, சீன மின்னணு-வணிக கடை பெருநிறுவனமான அலிபாபாவுக்கு சொந்தமானதாகும்.

2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாடி கார்கோ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் அந்த நிறுவனம் திவால் அடைவதாக விண்ணப்பித்தில் இருந்து ஷாங்காய் மற்றும் ஷென்சென் நகரங்களில் இந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் தென் நகரான ஷென்செனிலுள்ள நீதிமன்றம் ஒன்று இதை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, இவற்றை வாங்குபவரை தேடி கொண்டிருந்தது.

விற்பனைக்கு இன்னுமொரு விமானம்

உங்களுடைய போயிங் 747 விமானம் வைத்திருக்க விருப்பமா? இதற்கான வாய்ப்பை இழந்துவிட்டதாக கவலை அடைகிறீர்களா? கவலைப்படவே வேண்டாம். விற்பனைக்கு இன்னுமொரு விமானம் உள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பாம்பு விஷத்தை உடலில் செலுத்தி மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்துக்கு முயற்சி

இந்த மூன்றாவது விமானத்தை ஏலத்தில் எடுக்க ஒரேயெருவர்தான் பதிவு செய்திருந்ததால், விற்க முடியாமல் போயிற்று என்று சீன செய்தி நிறுவனமான சின்குவா குறிப்பிட்டுள்ளது.

அசாதாரணமான பொருட்களை மில்லியன் கணக்கான தொகைக்கு இணைய கடைகள் மூலம் விற்பனை செய்வது இது முதல்முறையல்ல.

2006 ஆம் ஆண்டு, சிறப்பு பாய்மரக் கப்பலுக்காக இபேயில் 85 மில்லியன் டாலர் வழங்கப்பட்டதுதான் மிகவும் பெரிய விற்பனை தொகையாகும்.

அதற்கு முன்னதாக, 4.9 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆகியிருந்த கல்ஃப்ஸ்டெம் II சார்ட்டர் ஜெட் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டதாக இருந்ததை முறியடித்து இந்த சிறப்பு பாய்மரக்கப்பல் விற்கப்பட்டது.

பிற செய்திகள்

.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :