பிபிசி தமிழில் இன்று... மதியம் 1 மணி வரை...

பிபிசி தமிழில் இன்று மதியம் ஒரு மணி வரை வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

நீதிமன்றப்படி ஏறிய பாகிஸ்தானிய நடிகை

படத்தின் காப்புரிமை AFP

தனக்கு திருமணம் நடந்ததா, இல்லையா என்பதை நிரூபிக்கும் பொருட்டு ஏழு வருடங்களாக நீதிமன்ற வழக்கு ஒன்றை சந்தித்து வருகிறார் பாகிஸ்தான் நடிகை.

செய்தியை வாசிக்க: திருமணம் ஆகவில்லை என்பதை நிரூபிக்க நீதிமன்றப் படி ஏறிய பாகிஸ்தானிய நடிகை!

பதவி இழக்கும் 9-ஆவது ஆஸ்திரேலிய எம்.பி.

படத்தின் காப்புரிமை AFP/getty images

இதனால் இதுவரை எட்டு பேர் தங்களது பதவியை இழந்துள்ளார்கள். இது ஆளுங்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பாதிக்கிறது.

செய்தியை வாசிக்க: இரட்டை குடியுரிமை: பதவி இழக்கும் 9-ஆவது ஆஸ்திரேலிய எம்.பி.

அகதிகள் தடுப்பு மையத்தில் நுழைந்த போலீசார்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மேனஸ் தீவில் உள்ள மூடப்பட்ட தடுப்பு மையம் (கோப்புப் படம்)

ஆஸ்திரேலிய அரசு வழங்கியுள்ள மாற்று இடங்களில் இன்னும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாதுகாப்பு வசதிகள் இல்லை என்றும் ஐ.நா அகதிகள் உயர் ஆணையம் கூறியுள்ளது. மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளும் அங்கு இல்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

செய்தியை வாசிக்க: ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு மையத்தில் நுழைந்த போலீசார்

"தூய்மை இந்தியா"

குஜராத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த நகரமான வாட்நகரை அடைந்தபோது, இந்திய அரசு தன்னுடைய லட்சிய திட்டமாக செயல்படுத்துகின்ற 'ஸ்வச் பாரத் அபியான்' அல்லது "தூய்மை இந்தியா" திட்டத்தின் செயல்பாடு மந்தமாக இருப்பதை உணர முடிந்தது.

செய்தியை வாசிக்க: மோதியின் சொந்த கிராமத்திற்கு சென்றடையாத “தூய்மை இந்தியா” திட்டம்

இணையதளம் மூலம் விமானங்கள் விற்பனை

படத்தின் காப்புரிமை Taobao.com

போயிங் 747 ஜம்போ விமானங்கள் இரண்டு 320 மில்லியன் யுவானுக்கு (36 மில்லியன் பவுண்ட்) இணையதளம் மூலம் விற்கப்பட்டுள்ளது.

செய்தியை வாசிக்க: இணையதளம் மூலம் ஏலத்தில் விற்பனையான போயிங் 747 விமானங்கள்

வீடற்ற பெண்களின் நிலை

"போர்த்திக்கொள்ளவும், போட்டுக்கொள்ளவும் துணி கிடைக்காதபோது, 'அந்த நாட்களில்' பயன்படுத்த துணி எங்கிருந்து கிடைக்கும்?'' இது சாலையோரங்களில் வசிக்கும் பெண்களில் ஒருவரான ரேகா என்ற பெண்ணின் நிலை.

செய்தியை வாசிக்க: மாதவிடாய் காலத்தில் வீடற்ற பெண்களின் நிலை என்ன?

இறந்த சிறுமிக்குமருத்துவக் கட்டணம் ரூ. 16 லட்சம்

படத்தின் காப்புரிமை Getty Images

ஏழு வயது சிறுமி டெங்குவால் பாதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சைக்காக டெல்லி புறநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார் . அவர் பிழைக்கவில்லை. ஆனால், அந்த மருத்துவமனை சிகிச்சைக்காக வாங்கிய தொகை ரூ.16 லட்சம்.

செய்தியை வாசிக்க: 15 நாள் டெங்கு சிகிச்சைக்குப்பின் இறந்த சிறுமி; மருத்துவக் கட்டணமோ ரூ. 16 லட்சம்

செயற்கைக்காலுடன் அலைச்சறுக்கல் - காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஒரு காலில் அலைச்சறுக்கல்; அசத்தும் வீரர்

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அலைச்சறுக்கல் வாய்ப்புகள் கொண்ட கடற்கரைகளுக்கு பயணிக்கிறார் இந்த வீரர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :