பிபிசி தமிழில் இன்று.. மதியம் 1 மணி வரை..

பிபிசி தமிழில் இன்று மதியம் 1 மணி வரை வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

லஷ்கர்-இ தய்பா தலைவர் விடுதலை

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹஃபீஸ் சயீத்

அவரை வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்வது பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற பாகிஸ்தான் அரசின் வாதத்தை லாகூர் உயர் நீதிமன்றம் மறுத்தது. அவரைப் பிடித்துக் கொடுத்தால் 10 மில்லியன் டாலர் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா 2012-இல் அறிவித்தது.

செய்தியை வாசிக்க: பாகிஸ்தான்: வீட்டுக் காவலில் இருந்த லஷ்கர்-இ தய்பா தலைவர் விடுதலை

மன உளைச்சலின் ஆரம்பக்கட்டத்தை எப்படி கண்டறிவது?

படத்தின் காப்புரிமை Getty Images

கல்வி சம்பந்தமான மன உளைச்சலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த 5 வழிகளை இங்கே பட்டியலிடுகிறோம்.

செய்தியை வாசிக்க: கல்வியில் மன அழுத்தம்: தற்கொலையை நாடாமல் மாணவர்களை காக்க 5 வழிகள்

பாம்பு விஷத்தை உடலில் செலுத்தி வரும் ஸ்டீவ்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பாம்பு விஷத்தை உடலில் செலுத்தி மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்துக்கு முயற்சி

கடந்த 30 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை தனது உடலில் செலுத்தி வரும் ஸ்டீவ், மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்தினை உருவாக்க விரும்புகிறார்.

ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

ஆர்.கே.நகர் எனப்படும் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் டிசம்பர் 21 அன்று நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

செய்தியை வாசிக்க: ஆர்.கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-இல் இடைத் தேர்தல்

அரசியலுக்கு வர ரஜினி அவசரம் காட்டாதது ஏன்?

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழக அரசியலில் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நுழைவாரா? மாட்டாரா? என பரபரப்பில் பல ஆண்டுகள் உருண்டோடியதுண்டு. இப்போது அவருடைய சமகால நடிகரான கமல் ஹாசன் அரசியலில் இறங்குவதற்கான தயாரிப்புகளில் மும்முரமாகிவிட்டார்.

செய்தியை வாசிக்க: அரசியலுக்கு வர ரஜினி அவசரம் காட்டாதது ஏன்?

சௌதி:ஆடம்பர ஹோட்டல் சிறை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ரியாத்தில் ஆடம்பர ஹோட்டல் சிறையில் நடப்பது என்ன?

சௌதி தலைநகர் ரியாத்திலுள்ள ஆடம்பர ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல் சிறையில் எவ்வளவு அதிக நாட்கள் இளவரசர்கள் உள்பட சுமார் 200 பிரமுகர்கள் இருப்பார்களோ அவ்வளவுக்கு அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி சௌதி அரேபியாவிலும், வேறு இடங்களிலும் அதிக கேள்விகள் எழும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :