ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தும் அமெரிக்கா

படத்தின் காப்புரிமை AFP

சிரிய குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதை அமெரிக்கா நிறுத்த உள்ளதாகத் துருக்கி தெரிவித்துள்ளது.

துருக்கி அதிபர் ரெசீப் தையிப் எர்துவான் உடனான தொலைப்பேசி அழைப்பில் டொனால்டு ட்ரம்ப் இந்த வாக்குறுதியை அளித்துள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுட் சவூஷாவ்லூ கூறினார்.

குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குகிறது என்பது துருக்கியின் நீண்டகால குற்றச்சாட்டாகும்.

சௌதி இளவரசரை முதிர்ச்சியற்றவர் என கூறிய இரான்

படத்தின் காப்புரிமை Reuters

இரானியத் தலைவர், மத்திய கிழக்கு நாடுகளின் ஹிட்லர் என சௌதி அரேபிய இளவரசர் கூறியிருக்க, அவரை 'முதிர்ச்சியற்றவர்' என இரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

இரானுக்கும் சௌதிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து கொண்டிருக்க, சௌதி இளவரசர் முகமத் பின் சல்மான், பிராந்திய சர்வாதிகாரிகளின் 'தலைவிதியை' புரிந்து கொள்ள வேண்டும் என இரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

'ஹஃபீஸ் சயீதை வீட்டுச்சிறையில் வையுங்கள்'

படத்தின் காப்புரிமை AFP

2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்திற்குத் தலைமை தாங்கியதாக இந்தியா மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் குற்றஞ்சாட்டப்பட்ட ஹஃபீஸ் சயீதை பாகிஸ்தான் மீண்டும் கைது செய்ய வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அவரை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்தால், அது பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற பாகிஸ்தான் அரசின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்ததையடுத்து ஹஃபீஸ் சயீத் விடுவிக்கப்பட்டார்.

ஜெர்மனியில் அரசியல் குழப்பம்

படத்தின் காப்புரிமை Getty Images

ஜெர்மனியின் அரசியல் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் விதமாக அந்நாட்டு சான்சிலர் ஏங்கலா மெர்கல், அவரது முன்னாள் கூட்டணி கட்சிகளுடன் விவாதம் நடத்த உள்ளார்.

தாராளவாத ஜனநாயக கட்சி மற்றும் பசுமை கட்சியுடன் கூட்டணி அரசாங்கம் அமைக்கத் தவறிவிட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :