பிபிசி தமிழில்.. ஒரு மணி வரை

பிபிசி தமிழில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வருகிறோம்.

படத்தின் காப்புரிமை காப்புரிமைAFP

மத்திய கிழக்கு நாடுகளில், அதிகரித்து வரும் இரானின் தாக்கத்தைத் தடுக்கும் நோக்கத்தோடு, சௌதி அரேபியாவும் இஸ்ரேலும் ஒன்றாக சேர்ந்து போராடுகின்றன. இந்த இரு நாடுகளுக்கிடையே வளர்ந்து வரும் உறவு முக்கியமானதாகும். இந்நிலையில் இந்த உறவிற்கு பின்னால் என்ன நிகழ்கிறது என்பதற்கான குறிப்பு அவ்வப்போது வெளிவருகிறது.

செய்தியை வாசிக்க: சௌதி அரேபியா-இஸ்ரேல் : ரகசிய கூட்டணியின் மர்மம் என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தோனீசியாவின் பாலி தீவில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் தீவிரமடைந்ததையடுத்து அப்பகுதி சுற்றிலும் உள்ள மக்களை வெளியேற்றும் மண்டலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இத்தீவுக்கு உயர்மட்ட எச்சரிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் விடுத்துள்ளனர்.

செய்தியை வாசிக்க: பாலி எரிமலை சீற்றம்: உயர்மட்ட எச்சரிக்கை விடுப்பு, விமான நிலையம் மூடல்

படத்தின் காப்புரிமை ANA JUNQUEIRA AND STEPHAN SCHUSTER

நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் உண்டாக்குவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது.

செய்தியை வாசிக்க:"பல நோய்களுக்கும் ஈக்கள்தான் காரணம்" - ஆய்வு தகவல்

படத்தின் காப்புரிமை HANDOUT VIA REUTERS

கிழக்கு சிரியாவில் உள்ள அல்-ஷஃபா கிராமத்தில் ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

செய்தியை வாசிக்க:சிரியா: ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 53 பேர் பலி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ரயில் இடிப்பதற்குமுன் கடைசி நொடியில் மீட்கப்பட்ட பெண் (காணொளி)

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில், ரயில் மோதுவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக ரயில் தண்டவாளத்திலிருந்து பெண் ஒருவர் மீட்கப்படும் காட்சி.

படத்தின் காப்புரிமை EPA

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நெடுஞ்சாலையை முடக்கிப் போராடிவரும் கடும்போக்கு இஸ்லாமியர்களை ஒடுக்க, படைகளைப் பயன்படுத்த வேண்டாம் என பாகிஸ்தான் அரசும் ராணுவமும் முடிவு செய்துள்ளது.

செய்தியை வாசிக்க: பாகிஸ்தான்: கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை கலைக்க ராணுவ நடவடிக்கை இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :