அடுத்த வருடம் தனது காதலியை மணக்கப்போவதால் மெய்சிலிர்த்து போன ஹாரி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இளவரசர் ஹாரி, மேகன் மார்க்லே

இளவரசர் ஹாரி தனது காதலியும் அமெரிக்க நடிகையுமான மெகன் மார்க்லேவை திருமணம் செய்துகொள்ளப்போவதை அறிவித்தது மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இளவரசர் ஹாரி, இது ஒரு அழகான காதல் திட்டம் என்றும், மார்க்லே '' நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், நன்றி'' என்றும் கூறினர்.

வெள்ளை பெல்ட் கொண்ட கோட் அணிந்திருந்த மார்க்லே, இளவரசர் ஹாரியின் கரங்களைப் பற்றியபடி, அரண்மனையின் சன்கென் கார்டனில் பத்திரிகையாளர்கள் முன்பு சிறிது நேரம் தோன்றி, தனது நிச்சயதார்த்த வைர மோதிரத்தை காட்டினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஒரு பத்திரிகையாளர் உங்களுக்கு மார்க்லேவை எப்போது தெரியும் என்று கேட்ட போது, நாங்கள் முதல் முறை சந்தித்தபோதே என்றார் ஹாரி.

படத்தின் காப்புரிமை PA

மார்க்கெல்லின் நிச்சயம் இளவரசர் ஹாரியால் வடிவமைக்கப்பட்டது மேலும் அவருக்கு அணிவிக்கப்பட்ட இரண்டு வைர மோதிரங்கள் மறைந்த அவரது தாயார் டயானாவினுடையது என்று கென்சிங்டன் மாளிகை அறிவித்துள்ளது.

அந்த மோதிரத்தின் நடுவே, இவ்விருவரும் ஒன்றரை ஆண்டுகள் கழித்த போட்ஸ்வானா நாட்டிலிருந்து பெறப்பட்ட வைரம் பதிக்கப்பட்டுள்ளது. மோதிரத்தின் வளையம் தங்கத்தால் செய்யப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :