பிபிசி தமிழில்.. ஒரு மணி வரை

பிபிசி தமிழில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வருகிறோம்.

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA

இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் இறுதி நாளான நவம்பர் 16ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் நிகழ்த்திய உரை அண்மைக் காலத்தில் அவர் நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி நிகழ்த்தியிருக்கக்கூடிய உரைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

செய்தியை வாசிக்க:புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பது ஏன்?

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தோனீசியாவின் பாலி தீவில் உள்ள அகுங் மலை, எரிமலை சாம்பல்களை வெளியேற்றி வருவதால், பாலி சர்வதேச விமானநிலையத்தை அதிகாரிகள் இரண்டாம் நாளாக மூடியுள்ளனர்.

செய்தியை வாசிக்க: பாலி எரிமலை சீற்றம்: மக்கள் வெளியேற மறுப்பு

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக, 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார். அதனை தொடர்ந்து அஜ்மல் கசாப்பின் கிரமாத்தில் நிலவிய சூழலை தெரிந்துக் கொள்ள அங்குச் சென்ற பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி தனது அனுபவத்தை இந்த கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார்.

செய்தியை வாசிக்க:மும்பை தாக்குதல்: கசாப் கிராமத்துக்கு சென்ற நிருபர்களுக்கு என்ன நடந்தது?

படத்தின் காப்புரிமை AFP

தென் கொரியாவில், சிசாட் (CSAT) தேர்வு நாளில் நடைபெறும் வினோதமான நடவடிக்கைகளை இங்கு தொகுத்துள்ளது பிபிசி. ஆண்டு தோறும், ஒரு நாள் தென் கொரியா முழுவதும் ஸ்தம்பித்து போகும். பயண நேரம் தாமதமாகும், பங்கு சந்தைகள் தாமதமாக திறக்கும் மற்றும் விமானங்கள் தரையிறங்கவோ, புறப்படவோ தடை செய்யப்படும். இது சிசாட் (CSAT) எனப்படும் கல்லூரி கல்வியியல் திறன் தேர்வு நடத்தப்படும் நாள்.

செய்தியை வாசிக்க:தென் கொரியா: ஒரு தேர்வுக்கு இவ்வளவு அக்கப்போரா?

உலகில் முதன்முதலில், குடியுரிமை பெற்ற ரோபோவான சௌதி அரேபியாவின் சோஃபியா ரோபோ, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளது.

செய்தியை வாசிக்க:குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் சோஃபியா ரோபோ

இலங்கையில் சட்ட ரீதியான பிரச்சினைகள் இல்லாத 93 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்பு மனுக்களை கோரும் அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், வடக்கு - கிழக்கு மாகாணங்களிலுள்ள 79 உள்ளூராட்சி சபைகளில் 24 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன.

செய்தியை வாசிக்க:இலங்கை: வடக்கு-கிழக்கில் 24 சபைகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :